பிக்பாஸ் 2 : ரசிகர்களை ஏமாற்றிய பிக்பாஸ்... மஹத்திற்குப் பதில் சிறைக்குச் செல்லும் போட்டியாளர்!
பிக்பாஸ் வீட்டில் உள்ள சிறைக்கு செல்கிறார் பொன்னம்பலம்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள சிறைக்குச் செல்லும் முதல் போட்டியாளர் ஆகியுள்ளார் பொன்னம்பலம்.
பிக்பாஸ் முதல் சீசனிலிருந்து வேறுபட்டு, இம்முறை அவ்வீட்டில் சிறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்து மூன்று வாரங்களாகியும், அந்த சிறைக்கு யாரும் செல்லவில்லை.
தெலுங்கு பிக்பாஸில் கூட மைக் அணியாதவர், ஆங்கிலத்தில் பேசியவர் என இரண்டு போட்டியாளர்கள் கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தமிழில் அதே தவறைப் பல போட்டியாளர்கள் செய்த போதும், சிறை தண்டனை அளிக்கப்படவில்லை. இதனால் எதற்கு அந்தச் சிறை என்ற குழப்பம் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.

சிறப்புச் சலுகை:
இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனந்த் வைத்தியநாதன் வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு முன்னர் அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகையின் படி, வீட்டில் இருக்கும் போட்டியாளர் ஒருவரை சிறைக்கு அனுப்பலாம் என கமல் அறிவித்தார்.

நன்றி:
அதனைத் தொடர்ந்து பெண்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசினார் என்ற குற்றத்திற்காக பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார் அனந்த் வைத்தியநாதன். அவர் அவ்வாறு தெரிவித்ததும், இளம் போட்டியாளர்களாக யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் அவரிடம் வந்து தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

கமலின் ஆதரவு:
முன்னதாக, அவ்வீட்டில் பெண்கள் சிலர் நடந்து கொள்ளும் முறை பற்றி பேசினார் பொன்னம்பலம். அவரது பேச்சுக்கு கமலும் கூட ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹத்:
இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியான போது, சிறைக்குச் செல்லப் போகும் முதல் போட்டியாளர் மஹத்தாகத் தான் இருக்கும் என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். காரணம் சக போட்டியாளர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் பிக்பாஸ் வீட்டில் உள்ளது. ஆனால், மக்களின் கணிப்பை மாற்றி, சிறைக்கு செல்லும் முதல் போட்டியாளராகியுள்ளார் பொன்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications