பிக் பாஸ்க்கு பிறகு யாரிடமும் பேசல.. காரணம் இது தான்! இப்போ மாறிட்டேன்.. ஆனால் அவங்க! ஐசு எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஐசு அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு இப்போது தான் முதல்முறையாக பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் தனக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் தான் நிகழ்ச்சிக்கு பிறகு எப்படி மாறி இருக்கிறேன் என்ற பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியே வந்த பிறகு தன்னோடு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் யாரிடமும் பேசவில்லை என்றும் அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அந்த பேட்டியில் ஐசு பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் பிரம்மாண்டமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இதில் கலந்துகொண்டு வெளியே வந்த ஐசு இதுவரைக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். அதுபோல பேட்டிகள் கூட கொடுக்கவில்லை. எல்லா போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பேட்டி கொடுப்பார்கள்.
ஆனால் ஐசு இதுவரைக்கும் அதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று முதல்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் ஐசுவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நீங்க யாரிடமாவது பேசினீங்களா என்று கேட்ட கேள்விக்கு ஐசு நான் யாரிடமும் பேசவில்லை. அதற்கான சந்தர்ப்பம் எனக்கு சரியாக அமையவில்லை. அதனால் நான் யாரிடமும் பேசவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஒரு சில வாரங்கள் நான் வித்தியாசமாக உணர்ந்தேன். அதற்கு பிறகு தான் நான் செய்த தவறுகள் எனக்கு புரிய வந்தது. மக்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள் நான் அதை சரியாக நிறைவேற்றவில்லை என்பது எனக்கு புரிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நான் இருந்தபோது உள்ளே எல்லோருமே உண்மையாகத்தான் விளையாடினார்கள்.
யாருமே நடித்துக் கொண்டு இருக்கவில்லை. அதுபோல உள்ளிருந்த எல்லா போட்டியாளர்களுமே ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் தான். ஆனால் எனக்கு ஆரம்பத்தில் பிரதீப், மாயா,ஜோவிகா இவர்கள்தான் ஸ்ட்ராங்கான போட்டியாளர்களாகவும் இவர்கள்தான் டைட்டில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூட நான் நினைத்தேன்.
அதுபோல என்னுடைய மனம் கவர்ந்த போட்டியாளர்களாக பிரதீப்பும் மாயாவும் இருந்தார்கள். விசித்திரா அம்மாவோடு எனக்கு ஒரு நல்ல பாண்டிங் இருந்தது. அவங்க என்னிடம் அதிகமான பாசமாக இருந்தாங்க. நான் வெளியே வந்த பிறகு கூட என்னைப் பற்றி அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் தேடிக் கொண்டிருந்தது விசித்திரா அம்மா தான். அதனால் நான் அவங்கள மறக்க மாட்டேன்.
அதுபோலஉள்ளிருந்த போட்டியாளர்களில் நான் தைரியமாக யாரோடு விளையாடுவேன் என்றால் விஷ்ணுவோடு தான். அவரை நம்பி எந்த விளையாட்டிலும் களம் இறங்கலாம். அவரால் எனக்கு எந்த பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் உள்ளே இருந்த போதும் சரி நான் வெளியே வந்த போதும் சரி விஷ்ணு அண்ணா ஒரே மனநிலையில் தான் இருந்தார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அதிகமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்த ஐசு வெளியே வந்து பேட்டியில் எல்லோரையும் எனக்கு பிடிக்கும், எல்லோரும் நல்லவங்க என்று பேசிக் கொண்டிருப்பது குறித்தும் அதிகமானோர் விமர்சித்து வருகிறார்கள். அதுபோல பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்டு கொடுத்து விட்டு இப்போது பிரதீப் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று நான் நினைத்தேன் என்று ஐசு கூறி இருப்பதும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு ஐசுவின் தந்தை அஸ்ரப் தன்னுடைய மகளை அருமையாக பேசியிருக்கிறார் என்று பாராட்டி இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications