வெளியேற்ற பட்டியலில் வசமாக செக் வைத்த பிக்பாஸ்...திணறும் போட்டியாளர்கள்
சென்னை: இந்த வார எலிமினேஷன் லிஸ்ட்டில் புதுவிதமாக டுவிஸ்ட் வைத்துள்ளார் பிக் பாஸ்.
Recommended Video
இதுவரைக்கும் இல்லாத வகையில் புது கண்டிஷனைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வாரத்தில் புது சம்பவம் காத்து இருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்த வாரத்தில் வித்தியாசம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டுதான் இருக்கிறார். போட்டியாளர் வெளிச்சத்திற்காக போட்டியாளர்களுக்கு எலிமினேஷன் செய்யும் வாய்ப்பு கொடுக்கப்படும். இதில் தனக்கு பிடிக்காத போட்டியாளர்கள் மற்றும் தான் இந்த விளையாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கும் போட்டியாளர்களை எலிமினேஷன் செய்து வருகின்றனர். ஆனால் இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த வாரம் வித்தியாசமான முறையை பிக்பாஸ் கையாண்டுள்ளது.

வித்தியாசமான வாக்களிப்பு
போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யும் நபர்களின் பெயர்களை இதுவரைக்கும் கன்பெக்ஷன் ரூமில் சென்று தான் வாக்களித்து கொண்டிருந்தனர். ஆனால் இதுவரைக்கும் இல்லாத வகையில் அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக இருக்கும் இடத்தில் வைத்து போட்டியாளர்களின் பெயர்களை ஒரு கண்ணாடி பாட்டிலில் எழுதி போட சொல்லி பிக்பாஸ் அறிவித்து இருந்தது. அதில் யார் பெயரை எழுதுகிறார்களோ?? என்று சக போட்டியாளர்கள் கொஞ்சம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாலும் இந்த இறுக்கமான சூழ் நிலையிலும் கூட சஞ்சீவ் காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

ஆப்பு வைத்த பிக்பாஸ்
யார் பெயரை எழுதுகிறார்களோ அவர்களை கூப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று சிபி கூறவும் சஞ்சீவ் உடனே சிபி அப்போ நீ இங்கே வா என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அண்ணாச்சியின் வெளியேற்றத்தால் ராஜு மட்டும் மன இறுக்கத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். இது அவரை பார்க்கும் அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் பிக் பாஸ் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறியிருக்கிறது. இந்த வாரம் நான் உங்கள் அனைவரையும் எலிமினேஷன் செய்கிறேன் என்று பிக்பாஸ் நேரிடையாக கூறியுள்ளார்.

யாருக்கு வெற்றி
எலிமினேஷனில் அனைத்து போட்டியாளர்களும் இருப்பதால் பிக் பாஸ் அவர்களுக்கு ஒரு விளையாட்டு கொடுத்திருக்கிறது. அதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் சில சலுகைகள் கொடுக்கப்படும் நிலையில் தோல்வியுறும் போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள் என்று கூறியிருக்கின்றனர். இதனால் யார் யாரெல்லாம் இந்த வாரம் எலிமினேஷன் ஆக போகிறார்களோ என்ற ஆர்வம் ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டு விட்டதவிட்டது.












Click it and Unblock the Notifications