வாடிவாசல் கிட்ட காத்திருக்கும் 3 பிரபலம்.. நடிகர் சூர்யா செம சேஞ்ச்.. வெற்றிமாறன் பலே: பாலாஜி பிரபு
சென்னை: வெற்றிமாறன், சூர்யா, அமீர் மூவருக்குமே தனிப்பட்ட முறையில் மனமாற்றம் ஏற்பட்டு, மூவருமே வாடிவாசல் படத்தில் இணைவதால், மிகப்பெரிய வெற்றியை இந்த படம் எதிர்காலத்தில் பெறக்கூடும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Aramnaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சூர்யாவை பொறுத்தவரை இயல்பிலேயே பக்குவப்பட்ட நடிகர். திமிர், தலைகணம் எதுவுமே அவரிடம் கிடையாது.. என்னமோ தெரியவில்லை, கதை தேர்வுகளில் மட்டும் சில பிரச்சனைகள் அவரிடம் இருக்கிறது.

பல வெற்றி படங்களை தொடர்ந்து தந்துட்டு இருந்தார்.. டாப் ஸ்டார் லெவலுக்கு சூர்யாவை கொண்டு சென்றார் டைரக்டர் ஹரி, சுதா கொங்குரா தந்த "சூரரை போற்று" படம் ஓடிடியில் இல்லாமல் தியேட்டரில் வெளிவந்திருந்தால், இன்னும் வேற லெவலுக்கு சூர்யா சென்றிருப்பார்.
மிஸ்ஸான படங்கள்: ஹரி, சுதா கொங்குரா இவர்கள் அடுத்தடுத்த இயக்கும் படங்களையும் சூர்யா மிஸ் செய்துவிட்டார். இவ்வளவையும் விட்டுட்டுதான் கங்குவாவை தேர்ந்தொடுத்தார்.. அது கிட்டத்தட்ட சொந்த தயாரிப்பு மாதிரிதான் ஞானவேல்ராஜா என்பவர் சூரியாவின் நெருங்கிய நண்பர்.. ஆனால் சூரியாவுக்கு பெரும் சொருட்செலவு ஏற்பட்டுவிட்டது. இப்படியொரு நஷ்டத்தை 2D நிறுவனமோ அல்லது சூர்யாவோ இதற்கு முன்பு சந்தித்ததே கிடையாது.
இதற்கு பிறகே சூரியாவிடம் மனமாற்றம் வந்துள்ளது.. பக்குவம் வந்துள்ளது.. தொடர்ந்து நல்ல படங்கள் செய்தால்தான், திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்பதை சூர்யாக நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
மனமாற்றம்: தலைக்கணம், திமிர் இல்லாமல் சூர்யா எப்படி இருக்கிறாரோ அதுபோலவே, ஒரு இயக்குனர்தான் வெற்றிமாறன்.. எத்தனையோ வெற்றிப்படங்கள் தந்தும்கூட, திமிர் என்பதே அவரிடம் இல்லை.. இயல்பான டைரக்டர்.. சமூகத்தில் நடக்கிற விஷயத்தை இயல்பாகவே சொல்லக்கூடியவர்..ஆனால், மற்றவர்களை போல, இவரும் தாமதமாக படம் எடுக்கிறார். இதை மட்டும் சரிசெய்து கொண்டால் போதும். இவரது விடுதலை 2 மிக நல்ல படமாக இருந்தாலும், தோல்வியை சந்தித்துள்ளது.
அந்தவகையில், விடுதாலை 2 தோல்வி, சூர்யாவின் கங்குவா தோல்வி, இரண்டுமே, சூர்யா, வெற்றிமாறனின் மனதை மாற்றியிருக்கிறது. இருவருமே வாடிவாசல் படத்தில் இணைகிறார்கள்..
வாடிவாசல்: வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் விரும்புகிறார்.. ஆரம்ப காலத்தில் சூர்யாவுக்கு "மௌனம் பேசியதே" ஹிட் படம் தந்த அமீர்.. ஆனால், அமீருடன் சில கசப்பான உணர்வுகள் சூர்யா குடும்பத்துக்கு ஏற்பட்டுவிட்டது. முன்பகைகளை வைத்து கொள்ளக்கூடிய நபர் அமீர் கிடையாது.. யதார்த்த மனிதர். நல்ல படைப்பாளி.. நல்ல புரட்சி கருத்துக்களை சொல்லக்கூடிய டைரக்டர்..
இந்த காலத்தில் இவர்கள் சேரணும்னு, ஒரு சந்தர்ப்பம் படத்தில் வரும்போது, பழைய குரோதத்தை காட்டி கொள்ள மாட்டார்கள்.. பகைமையை தவிர்க்கவே விரும்புவார்கள். காரணம், சூர்யா, அமீர் இருவருமே அடிப்படையில் நல்லவர்கள். மொத்தத்தில், வெற்றிமாறன், சூர்யா, அமீர் மூவருக்குமே தனிப்பட்ட முறையில் மனமாற்றம் ஏற்பட்டு, மூவருமே வாடிவாசலில் இணைவதால், மிகப்பெரிய வெற்றியை இந்த படம் எதிர்காலத்தில் பெறக்கூடும்" என்று கூறியிருக்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications