பிக்பாஸ் 2: ஐஸ்வர்யா - ஷாரிக்... உருவாகிறார்களா இன்னொரு ஓவியா- ஆரவ்?

பிக்பாஸ் வீட்டின் புதிய காதல் பறவைகளாக ஐஸ்வர்யா - ஷாரிக் இருப்பார்கள் என எதிர்பார்க்கத் தோன்றுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி?- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் முதல் சீசனில் காதல் பறவைகளாக இருந்த ஓவியா - ஆரவ் போல, இம்முறை சீசன் 2வில் ஐஸ்வர்யா - ஷாரிக் இருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

    பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதும், சொல்லிக் கொள்ளும்படி சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் மக்களை ஏமாற்ற விரும்பாத பிக்பாஸ், அந்த வீட்டின் அடுத்த காதல் பறவைகள் யார் என்பதை நாசூக்காக சுட்டுக் காட்டி விட்டார்.

    அதன்படி, நேற்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று தரப்பட்டது. அதில், ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கேள்வி கேட்டப்பட்டது. அதற்கு நேர்மையாக பதிலளித்தால் தான் லக்சரி பட்ஜெட்டிற்கான புள்ளிகள் முழுமையாக கிடைக்கும் என்ற நிபந்தனை வேறு.

    வில்லங்கமான கேள்வி:

    வில்லங்கமான கேள்வி:

    முதல் போட்டியாளராக ஷாரிக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. முதல் கேள்வியே வில்லங்கமாக இருந்தது. அதாவது, ‘இங்கிருக்கும் பெண் போட்டியாளர்களில் யாருடன் டேட்டிங் செல்ல விருப்பம்?' என்பது தான் அது.

    ஜனனியும் ஷாக்:

    ஜனனியும் ஷாக்:

    இந்தக் கேள்வியைப் படித்ததும் பார்வையாளர்களைப் போலவே ஷாரிக்கும் கொஞ்சம் ஷாக் ஆகி விட்டார் போல. சத்தமாக கேள்வியை வாசிக்காமல் மனதிற்குள் வாசித்துப் பார்த்தார். ஆனால், அவருக்குத் தமிழ்ப் படிப்பதில் தான் சிரமம் எனக் கருதி, உதவிக்கு வந்த ஜனனியும் கேள்வியைப் பார்த்து ஷாக் ஆனார்.

    ஐஸ்வர்யா தான்:

    ஐஸ்வர்யா தான்:

    உடனே அனைவரும் பதில் அறிந்தவர்கள் போல கலாய்க்க தொடங்கி விட்டனர். மனதில் தோன்றுவதை டக்கென சொல்லிவிடு என மமதி உள்ளிட்டோர் ஷாரிக்கிற்கு உற்சாகம் அளிக்க, அவர் ‘ஐஸ்வர்யா தான் என் சாய்ஸ்' எனப் பதிலளித்தார். காரணம் ‘அவர் அழகாக ‘பொத பொத'னு இருக்கிறார். அங்கும் இங்கும் சுற்றுகிறார்' என்று ஏதேதோ காரணம் சொன்னார்.

    பதில் மரியாதை:

    பதில் மரியாதை:

    அதை ஏற்று சிரித்துக்கொண்டே நன்றி தெரிவித்தார் ஐஸ்வர்யா. பதில் மரியாதையாக ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, மறக்காமல் ஷாரிக் பெயரைச் சொல்லிச் சென்றார். இதனை தலைவி உட்பட அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் கலாய்த்தனர்.

    தனியே பேச்சு:

    தனியே பேச்சு:

    இது போதாதென்று, டாஸ்க் முடிந்ததும் ஐஸ்வர்யாவையும், ஷாரிக்கையும் தனியாக அழைத்துச் சென்ற ஜனனி, ரெண்டு பேரும் பேசுங்க என்றார். உடனே என்ன பேசுவதென்று விழித்த அவர்கள், ஜனனியின் தலைவி புகழ் பாடி எஸ்கேப் ஆகினர். இதனை மகத்தும், யாஷிகாவும் கலாய்த்தது தனிக்கதை.

    ஆரவ் சொன்ன அதே பதில்:

    ஆரவ் சொன்ன அதே பதில்:

    இதையெல்லாம் பார்க்கும் போது பிக்பாஸ் வீட்டில் மற்றொரு ஓவியா- ஆரவ் போன்ற காதல் பறவைகளை பிக்பாஸ் உருவாக்க நினைக்கிறாரோ என்ற சந்தேகமே எழுகிறது. காரணம் முதல் சீசனின் போது, ஆரவ் இந்த வீட்டில் இருப்பவர்களில் ஓவியாவைத் தான் பிடித்திருக்கிறது என்றுதான் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+