பிக்பாஸ் 2 : திரும்பவும் ஓவியாவா? அப்செட் ஆன சக போட்டியாளர்கள்
ஓவியாவின் வருகையால் சக போட்டியாளார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவைப் பார்த்ததும் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. முதல்நாளான நேற்று போட்டியாளர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, வீட்டிற்குள் வழியனுப்பி வைத்தார் நடிகர் கமல்.
பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அதிரடி எண்ட்ரி கொடுத்தார் ஓவியா.
பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு போட்டியாளர்களாக வந்தபோது, சக போட்டியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர், நன்றாக பேசிக் கொண்டனர். ஆனால் ஓவியா வந்தபோது அப்படி நடக்கவில்லை.

பெண் போட்டியாளர்கள்:
போட்டியாளராக ஓவியாவை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். இது அவர்களது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் ஓவியாவைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள்.

அமோக வரவேற்பு:
காரணம் கடந்த சீசனில் ஓவியாவிற்கு கிடைத்த வரவேற்பு அப்படி. கட்சித் தலைவர் ஒருவர் இப்படி எனக்கு வாக்குகள் கிடைத்திருந்தால் நான் முதல்வர் ஆகியிருப்பேன் என ஏக்கப்படும் அளவிற்கு அதிக வாக்குகள் மக்களிடமிருந்து பெற்றார். ஓவியாவிற்காக ஓவியா ஆர்மி கூட உருவானது.

பாதியிலேயே வெளியேறினார்:
நிச்சயம் முதல் சீசனில் ஓவியாதான் வெற்றியாளராக வருவார் என மக்கள் மட்டுமின்றி, சக போட்டியாளர்களும் கருதினர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி பாதியிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தார் ஓவியா. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவருக்கு புதிய படவாய்ப்புகளும், நல்ல பெயரும் தொடர்கிறது.

பயங்கர ஷாக்:
இந்நிலையில், மீண்டும் இரண்டாவது சீசனில் ஓவியாவின் வருகை மற்ற போட்டியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த சீசனில் ஓவியா நடந்து கொண்டதைப் போல் நடந்து கொண்டு மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என எண்ணிக் கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு ரியல் ஓவியாவே போட்டியானது சோர்வடைய வைத்துள்ளது என்றே கூறலாம்.

நடிப்பு:
உண்மையில் இந்த சீசனில் ஓவியா போட்டியாளர் இல்லை. சிறப்பு விருந்தினராகத் தான் உள்ளே சென்றிருக்கிறார். ஆனால், கமல் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போட்டியாளராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கானா பாடகி இசைவாணியின் கல்யாணம்.. கணவர் யார் தெரியுமா? சர்ப்ரைஸ் கொடுத்த கனிமொழி.. மேடையில் நெகிழ்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications