சட்டப்பேரவையில் மட்டுமல்ல.. பிக் பாஸ் வீட்டிலும் வெளிநடப்பு.. அதுவும் யார் தெரியுமா? ஆரம்பமே இப்படியா?
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பேசியதுதான் சோசியல் மீடியாவில் பெரியதாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தங்களுக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அதே சம்பவம் இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் நடந்திருக்கிறது.
பிக் பாஸ் அப்டேட்
பிக் பாஸ் வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மாதிரி ஒரு அறை வைக்கப்பட்டிருந்தது. அது எதற்காக என்று நேற்று ஹோம் டூர் சுற்றி பார்த்த விஜய் சேதுபதி பிக் பாஸிடம் கேட்டு இருந்தார். அதற்கு போக போக தெரியும் என்று பிக் பாஸ் சொல்லிவிட்டார். இந்த நிலையில் அது ஜனநாயக அறை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த அறையில் இன்று விவாதம் நடந்திருக்கிறது.

ஜனநாயக அறை
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் 19 போட்டியாளர்களும் இரண்டு அணியாக பிரிந்து, மற்ற அணியினர் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க தகுதியானவர்களா? இல்லையா? என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது முழுமையாக புதிய டாஸ்க் என்று சொல்லிவிட முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே சண்டை இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் அடிக்கடி கொளுத்தி போடுவது போலத்தான் இந்த முறையும் கொளுத்தி போட்டு இருக்கிறார்கள். அதை வைத்து இப்போ போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பித்திருக்கிறது.
வெளியேற்றம்
நேற்றுதான் நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் முழுதாக ஒரு நாள் கூட ஒன்றாக இருக்கவில்லை. அதற்குள் உனக்கு இந்த வீட்டில் இருக்க தகுதி கிடையாது என்று எந்த அடிப்படையில் இவர்கள் கருத்து சொல்ல போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏதோ நமக்கு ப்ரோமோவில் இடம் கிடைக்க வேண்டும் என்றே வாக்குவாதத்தை எல்லோரும் தொடங்கி விட்டார்கள். அதிலும் ஒரு படி மேலே போன முனியம்மா நான் வெளிநடப்பு செய்யப் போறேன் என்று ஜனநாயக அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார்.
பிக் பாஸ் முனியம்மா
ஏற்கனவே சட்டப்பேரவையிலும் வெளியேற்றம் வெளிநடப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால் இந்த பக்கம் பிக் பாஸ் வீட்டுக்குள் இதையே பண்ணுறாங்களே என்று கிண்டல் செய்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முனியம்மாவிற்கு ஒரு பக்கம் சப்போர்ட் இருந்தாலும் அதிகமான நெகட்டிவ் இருக்கிறது.
நேற்று விஜய் சேதுபதி பிக் பாஸ் மேடையில் பொய் சொல்லிவிட்டாரா? இங்கேயும் அரசியலா? ஆதாரம் லீக்
இவர் ஒன்றும் தெரியாத வெகுளி போல பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று இவருடன் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் போட்டியிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் பலரும் சொல்லியதை தொடர்ந்து ரசிகர்களும் அதையே பிடித்து இவரை திட்டி வருகிறார்கள். இதற்கிடையே இவர் வெளிநடப்பு செய்த ப்ரோமோ வெளியானதும் மீம்ஸ் டெம்ப்லேட்டாக மாறிவிட்டார்.


Click it and Unblock the Notifications
