பிக் பாஸ் 10: ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பல மாற்றம்.. முதல் நாளே 6 எவிக்ஷன்.. உள்ளே நடந்தது இதுதானாம்!
சென்னை: இன்னும் சில மணி நேரம்தான் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 10வது சீசன் என்பதால் இந்த முறை ஆரம்பமே வித்தியாசமாக இருக்கப்போகிறது. விஜய் சேதுபதி தொடர்ந்து 3வது முறையாக தொகுப்பாளராக களமிறங்குகிறார். அதோடு தி காமன் மேன் என்ற முயற்சி மூலம் சாதாரண மக்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே யார் யார் வீட்டுக்குள் செல்ல போகிறார்கள்? யார் முதல் நாளிலேயே வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தனை நாளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றுங்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் கடைசியில் இப்போ முதல் நாளே பரபரப்பை ஏற்படுத்திவிட்டாங்க.

இந்த சீசனில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே மகாநதி சீரியல் நடிகை லக்ஷ்மி பிரியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தங்கராஜன், நடிகை தன்யா பல்லத், புவியரசு, ஆனந்தி அஜய், ப்ளாக் பாண்டி, நவீன் குமார், ரிவியூவர் பிரசாந்த் ரங்கசாமி, வினோத் பாபு, குக் வித் கோமாளி முகமது அன்சர், கவிதா மோகன், ஷபி ஷப்னம் மற்றும் பிக் பாஸ் காமன் மேன் போட்டியாளர்களும் சேர்த்து 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் 10 போட்டியாளர்கள்
இது ஒரு பக்கம் இருந்தாலும் போன சீசனில் சாச்சனா 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்டதே பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஆனால் இந்த சீசனில் அதற்கு ஒரு படி மேலே போய் நிகழ்ச்சி தொடங்கிய மேடையிலேயே சிலருக்கு டாட்டா காட்டப்பட்டிருக்கிறது. அதில் முதல் யார் தெரியுமா? பிரசாந்த் ரங்கசாமி தான் இவர். பல படங்களை ரிவ்யூ செய்து பிரபலமாக இருந்தாலும் எங்களுக்கு எல்லாரும் ஒன்னு தான் பாஸ் என்று பிக் பாஸ் இவருக்கு மூன்று பேர் இடையில் போட்டி வைத்து அனுப்பி வைத்து விட்டார்கள்.
அதாவது பிக் பாஸ் மேடையில் வைத்து பிரசாந்த், பிரித்விநாத், ஜாவித் ஆகியோருக்கு போட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் மூன்று பேரும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் யார் பேசியது பார்வையாளர்களுக்கு பிடித்திருக்கிறது? அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என்று பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதில் பிரித்விநாத் மற்றும் ஜாவித் அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
பிரசாந்த் ரங்கசாமி வெளியேற்ற
இதனால் பிரசாந்த் மேடையிலேயே தன்னுடைய விளையாட்டை முடித்துவிட்டு வெளியேறி இருக்கிறார். ஆனால் அவர் வெளியே வந்து ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். பேட் கூட எடுக்காமல் அவுட் ஆகிவிட்டேன். என்று தன்னுடைய எலிமினேஷனை ஜாலியாக போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு நான் எந்த விதியையும் மீறவில்லை கடைசி வரை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினேன். இது வெறும் கேம் தான் என்று அவருக்கு அவரே ஆறுதலும் சொல்லி இருக்கிறார்.
பிக் பாஸ் முதல் நாள் எவிக்ஷன்
அதுபோல கடந்த சீசனிலயே நடிகை ஷபி ஷஃப்னம் பெயரும் அடிபட்டது. இவர் தெய்வமகள் சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அவரும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் லாஞ்ச் மேடையிலே எவிக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டுக்கு போவதற்காக வாரக்கணக்கில் பர்சஸ் செய்து மேக்கப் எல்லாம் போட்டு வந்தவருக்கு சரி நன்றி நீங்கள் போகலாம் என்று மேடைகளிலே சொல்லப்பட்டு இருக்கிறதா? என்பது போல தான் அவருடைய எவிக்ஷனும் அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் எவிட் செய்யப்பட்டு மறுபடியும் வைல்ட் கார்டாக உள்ளே அனுப்பப் போகிறார்களா? என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது.
கவிதா மோகன்
இந்த சீசனின் இன்னொரு சுவாரஸ்யமான பெயர் யோகினி கவிதா மோகன் யோகாவில் பல விருதுகளை வாங்கிய இவருக்கும் மேடையில் பார்வையாளர்களின் வாக்கெடுப்பு மூலம் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்ததாக கூறப்படுகிறது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் போகணும்னா முதல்ல மக்கள் மனசுல இடம் பிடிக்க வேண்டும் என்று சொல்ல விட்டது போல இருக்கிறது.
எதிர்பாராத சம்பவம்
இதோடு அக்ஷிதா, கரிஷ்மா, மதிவாணன் உள்ளிட்ட சில பெயர்களும் தொடக்க கட்டத்திலேயே வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அக்ஷிதா அசோக்குக்கு ஏற்கனவே சின்னத்திறையில் பிரபலம் இருக்கிறது. ஆனால் அவரைத்தான் எப்படி வெளியே அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன பிறகுதான் டென்ஷன் ஆரம்பிக்கும் யாருடன் சண்டை வரும்? யார் நண்பர்களாக மாறுவார்கள்? முதல் கேப்டன் யார்? முதல் நாமினேஷன் யார்? மக்கள் யாரை காப்பாற்றுவார்கள் என்று அடுத்தடுத்து கேள்வி வரும்.
ஆனால் இங்கு இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நீங்க செலக்ட் ஆகிட்டீங்க வாங்க என்று கூப்பிட்டு பிக் பாஸ் மேடையிலேயே இத்துடன் உங்கள் விளையாட்டு முடிவடைந்தது நன்றி வணக்கம் என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுதான் இப்போ பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஆனாலும் என்ன செஞ்சாவது நாங்க இந்த சீசனை பற்றி பேச வைத்து விடுவோம் என்று சேனல் தரப்பினர் செம வேலை பார்த்திருக்கிறார்கள் என்பது இப்போதே தெரிகிறது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு எப்படி போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
