பிக் பாஸில் லட்சுமி பிரியாவை ரவுண்டு கட்டி அடிக்கும் முனியம்மா.. விஜய் சேதுபதி உபதேசம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆரம்பமே இப்படியா? என்று சொல்றது மாதிரி தான் லட்சுமி பிரியா மற்றும் முனியம்மா இருவருக்கும் சண்டை வந்திருக்கிறது. ஏற்கனவே முனியம்மா ஷாதிகாவிடம் அறிவு இருக்க? மூஞ்ச பாரு என்று திட்டி இருந்தார். அதே போல இப்போதும் லட்சுமி பிரியாவை மூஞ்ச பாரு மூஞ்சி என்று திட்டி இருக்கிறார். இதனால் இருவருக்கும் பஞ்சாயத்துக்கு ஏற்பட்டு இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சில விஜய் டிவி ப்ராடக்ட் வந்து விடுவார்கள். அவர்களுக்கு கொஞ்சம் சப்போர்ட் அதிகமாக தான் இருக்கும். தொகுப்பாளர்கள் கூட அவ்வப்போது ஏதாவது அவர்களை திட்டினாலும் எலிமினேஷனில் இருந்து மட்டும் தப்பி விடுவார்கள். அது போல இந்த சீசனில் லட்சுமி பிரியா வந்திருக்கிறார். இவருக்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் சப்போர்ட் அதிகமாக கிடைத்தது. காரணம் இதற்கு முன்பு அவர் நடித்த மகாநதி சீரியல் தான்.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

மகாநதி சீரியல் நடிகை

அந்த சீரியலில் காவிரி ஆக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததால் இந்த நிகழ்ச்சியிலும் அவருடைய நிஜ கேரக்டரை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு சில இடங்களில் சுயநலமாக இருப்பதும், தனக்காக மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதும் ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள். இதனாலேயே அவருக்கு எதிராகவும் பலர் மாறிவிட்டார்கள்.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

முனியம்மாளுக்கு சலுகை

இப்படி இருக்கும்போது முனியம்மாளுக்கும் பிக்பாஸ் டீம் அதிக சலுகை கொடுக்கிறது. குறிப்பாக விஜய் சேதுபதி முனியம்மாவை பேச விட்டு ரசித்துக் கொண்டிருக்கிறாரே தவிர எந்த இடத்திலும் அவரை பெரிதாக திட்டவில்லை. மற்ற போட்டியாளர்கள் ஏதாவது சொன்னால் உடனே அவர்களை பாதியிலேயே நிறுத்தி உட்கார வைத்து விடுகிறார்‌. ஆனால் முனியம்மா பேசுவது சில இடங்களில் ஜாலியாக இருந்தாலும் பல இடங்களில் கோபப்படுற மாதிரி தான் இருக்கிறது. அப்போது கூட விஜய் சேதுபதி அவருக்கு பெரிதாக அட்வைஸ் கொடுக்காமலே இருக்கிறார்.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

வித்தியாசமான கேரக்டர்

இதனாலயே நாம்தான் இந்த வீட்டுக்கு ராணி என்பது போலவே முனியம்மா நடந்து கொள்கிறார். ஏற்கனவே முதல் வார தலைவராக இருந்த ஷாதிகாவை பார்த்து காரி துப்பி விட்டு உன் மூஞ்ச பாரு மூஞ்ச என்று திட்டி இருந்தார். அப்போதே விஜய் சேதுபதி அவருக்கு அட்வைஸ் செய்ய வேண்டும் அல்லது அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் சொல்லி வந்தனர். ஆனால் எதையுமே விஜய் சேதுபதியும் செய்யவில்லை. ஆனால் இதனால் இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் லட்சுமி பிரியாவை மூஞ்ச பாரு மூஞ்ச என்று திட்டி இருக்கிறார்.

Bigg Boss Vijay Sethupathi Vijay TV

விஜய் சேதுபதி முடிவு

இதுவரைக்கும் லட்சுமி பிரியா எத்தனை இடங்களில் ரசிகர்களை கடுப்பாக்குற மாதிரி இருந்தாலும், இன்று அவரை முனியம்மா திட்டும் போது அவருக்கு சப்போர்ட் அதிகரிக்கிறது. காரணம் இதே போல முனியம்மாவை யாராவது மூஞ்ச பாரு என்று திட்டி இருந்தால் நான் கிராமத்து பொண்ணு, அழகாக இல்லை... கருப்பாக இருக்கிறேன் என்று என்னை இப்படி திட்டி விட்டார்கள் என்று ஒரு கார்ட் தூக்கி இருப்பார் ஆனால் இப்போ அவர் மட்டும் அனைவரையுமே மூஞ்ச பாரு மூஞ்ச.. போங்க பிள்ளைகளா.. என்றெல்லாம் திட்டிக் கொண்டிருக்கிறார்.

சக போட்டியாளர்கள் என்றால் இவர் விட்டு அடிமைகள் என்பது போல இவர் நடந்து கொள்வது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த வாரம் விஜய் சேதுபதி என்ன உபதேசம் கொடுக்கப் போகிறார்? என்றும் பலர் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். சரி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+