வாட்டர் மெலன் ஸ்டாருக்கு டப் கொடுக்கும் முனியம்மா.. காரி துப்பி, அசிங்கமா நடக்க காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் ரசிகர்களை வெறுப்பேற்றுவதற்காகவே வந்து விடுகிறார். அந்த வகையில் தான் இப்போதைய 10வது சீசனிலும் முனியம்மா என்ற கேரக்டர் வந்திருக்கிறார். இவர் ஏற்கனவே பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகமான நெகட்டிவ் பெற்றவர் தான். அவரை இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் அவர் செய்த செயல் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது என்பது எல்லோருக்குமே தெரியும். அதில் வெளியே நல்ல பெயர் வாங்கிய பலர் உள்ளே வந்து கெட்ட பெயர் வாங்கிட்டு போயிருக்கிறார்கள். சிலருக்கு வெளியே நெகட்டிவ் இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு இவங்களையா? நாம இப்படி நினைச்சோம் என்று சொல்ல வைத்து விடுவார்கள். அவர்களுடைய இன்னொரு கேரக்டர் இந்த வீட்டில் தெரிய வந்திருக்கிறது.

பிக் பாஸ் போட்டியாளர்

ஆனால் ஒரு சிலர் இருக்கிறார்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தாலே நாம சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ப்ரோமோவில் நம்மை காட்டிக்கொண்டே இருப்பார்கள் என்று பக்கா பிளானோடு வருவார்கள். அந்த வரிசையில் தான் இப்போ முனியம்மாவும் வந்திருக்கிறார். இவர் ஏற்கனவே காமன்மேன் நிகழ்ச்சியிலும் இதே வேலையை தான் பார்த்துக் கொண்டிருந்தார். எந்த போட்டியாளர்களோ, நடுவர்களோ யார் என்ன சொன்னாலும் சரி அதற்கு விதண்டாவிதமாக எதிர்த்து பேசியே பழக்கப்பட்டவர்.

உண்மையில் இவருடைய கேரக்டர் இப்படியா? இல்லை கேமரா இவரை கவனிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறாரா? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு அப்போது இருந்தே இருக்கிறது. காமன் மேன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு கூட அவருக்கு விஜய் டிவி தரப்பில் அதிக சப்போர்ட் இருக்கிறது. அவரை எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டுட்டு போயிருவாங்க என்று சொன்னார்கள் ஆனால் அது இப்போ உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

பிக் பாஸ் முனியம்மா

சரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு இவருடைய விளையாட்டு சுவாரசியமாக இருக்குமா? கிராமத்தில் இருந்து வந்த வெகுளித்தனமான கேரக்டர் போல தன்னை காட்டிக் கொண்டாலும் போன சீசனில் வந்த வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் போலத்தான் மொத்த ப்ரோமோவிலும் நானே வருவேன், நீங்க என்ன சொன்னாலும் நான் அதற்கு எதிராகத்தான் பேசுவேன் என்று இவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் இந்த வார பிக் பாஸ் தலைவர் சாதிகாவுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அவர் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசிக்கொண்டே இருக்கிறார். அதனாலேயே சாதிகாவிற்க்கு இவர் மீது பயம் வந்தது போல தான் இருக்கிறது. முனியம்மாவிடம் சில இடங்களில் பாய்ண்டாக பேசி அவரை ஆப் செய்கிறார். ஆனால் அவருக்கு எந்த பனிஷ்மெண்ட்டும் கொடுக்கவில்லை. இதனாலையே ரசிகர்களுக்கு முனியம்மாவை பார்த்தால் மேலும் மேலும் கோபம்தான் வருகிறது.

பிக் பாஸ் ப்ரோமோ

இந்த வாரம் அவரைத்தான் வெளியே அனுப்பப் போகிறார்களா என்று எதிர்பார்ப்புடனும் சிலர் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் என்ன சமைக்கலாம் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது சாதிகா இன்று புளியோதரை செஞ்சிடுவோம் என்று சொன்னதும் அதற்கு முனியம்மா துப்பி அது ஒரு சாப்பாடு என்பது போல ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி முடிவு என்ன?

உடனே கடுப்பான சாதிகா அவரை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல, அதற்கு தலைவர் சாதிகாவை பார்த்தோம் காரிதுப்பிவிட்டு நான் போகமாட்டேன், வேணும்னா நீங்க எல்லாரும் வெளியே போங்க என்று கெத்தாக அமர்ந்து இருக்கிறார். இவர் செய்வதை பார்க்கும்போது இவங்க அப்ரானி இல்ல, பிக் பாஸ் 9 சீசனையும் கரைச்சுகுடிச்சுட்டு பாதி பார்வதியாகவும், பாதி வாட்டர் மெலன் ஸ்டாராகவும் சேர்ந்த கலவையாகத்தான் வந்திருக்கிறார். சரி இந்த வரம் விஜய் சேதுபதி என்ன பதிலடி கொடுக்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+