விஜய் சேதுபதியை ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய முனியம்மா.. என்னம்மா இப்படி பேசிட்டீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ஷிப் பற்றி பேசியது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த விஜய் சேதுபதியை முனியம்மா பாடாய் படுத்தி இருக்கும் காட்சிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்றைய எபிசோடில், விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை பிக் பாஸ் விதிமுறைகளை உங்களை எழுத சொல்லி இருக்கிறாரே என்ன காரணம் என்று கேட்டிருந்தார். அப்போது எல்லா போட்டியாளர்களும் அவர்களுக்கு மனதில் பட்டதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த கேள்வி முனியம்மாவிடம் வந்தது.

Bigg Boss

பிக் பாஸ் 10 எபிசோடு

உடனே முனியம்மா, அது தான் சார் இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத மாதிரி பல மாற்றங்கள் கொண்டு வந்து இருக்காங்களே அதே போல ஒரு மாற்றமும இதையும் கொண்டு வந்திருப்பாங்களா இருக்கும்.. அதாவது சார், இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டொமோக்ரசி ரூம் கிடையாது என்று முனியம்மாள் சொன்னதும், விஜய் சேதுபதி என்ன சொல்லுறீங்க? டெமாகிராஸியா என்று கேட்டார் பிறகு ஆமா சார் அந்த ரூம் கொண்டு வந்த மாதிரி தான் இந்த முறை இதுவரைக்கும் நாமளே விதிமுறைகள் கொடுக்கிறோமே நீங்களே விதிமுறைகள் வச்சுக்கோங்க என்று பிக் பாஸ் நினைச்சி இருக்குமா இருக்கும் என்று முனியம்மாள் சொல்கிறார்.

Bigg Boss

விஜய் சேதுபதி பேச்சு

அதற்கு விஜய் சேதுபதி அதுதான் எதற்காக உங்களை விதிமுறை எழுத சொன்னாங்க? என்று மீண்டும் கேட்க, அதுதான் சொல்றேனே சார் இந்த முறை புது மாற்றம் பல கொண்டு வந்திருக்காங்க.. அதுல இது ஒரு மாற்றம் என்று அதுதான் இந்த வாழைப்பழம் என்ற கவுண்டமணி செந்தில் காமெடி போலவே விஜய் சேதுபதி கேட்கும் கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் சொன்ன பதிலையே முனியம்மா சொல்ல, ஒரு கட்டத்தில் கடுப்பான விஜய் சேதுபதி தலையை சொரியும்போது அங்கிருந்த பார்வையாளர்கள் முனியம்மா பேசியதற்க்கு கைதட்டியதும் விஜய் சேதுபதி கடுப்பாகிவிட்டார்.

கடுப்பான விஜய் சேதுபதி

நீங்க கைதட்டி இவங்களை இன்னும் உசுப்பேத்தி விட்டுறாதீங்க என்று பதறி இருக்கிறார். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் சேதுபதி தனக்கு தான் எல்லாமே தெரியும் என்பது போல இந்த நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கிறாரே ஆனால் அவரையும் குழப்புவதற்கு முனியம்மா இருக்கிறார், என்னதான் முனியம்மாவே எங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இப்போ விஜய் சேதுபதியை கதறவிடுவதால் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பலர் கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கிறார்கள்.

Bigg Boss

நெட்டிசன்கள் கருத்து

இதுவரைக்கும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது ஒரு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதற்கு காரணம், போட்டியாளர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்காமல் அவர் மனதில் நினைத்திருப்பதை போட்டியாளர்கள் சொல்ல வேண்டும் என்பது போலவே கேள்விகளை மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருப்பார். இது பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துவதை விட எரிச்சலை தான் ஏற்படுகிறது என்று கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நேற்று எபிசோடில் முனியம்மா பேசியதற்கு நெட்டிசன்கள் மணம்மகிழ்ந்து கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+