‘தமிழகத்தின் சர்வாதிகாரி’.. பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரித்விகா!
பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ரித்விகா.
Recommended Video

சென்னை : பிக் பாஸ் வீட்டில், 'தமிழகத்தின் சர்வாதிகாரி' என முக்கிய அரசியல்தலைவர் ஒருவரைக் குறித்து மறைமுகமாகப் பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரித்விகா.
ஆரம்பம் முதலே சுவாரஸ்யம் குறைவாகச் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், விறுவிறுப்பைக் கூட்ட ஏதேதோ செய்து வருகிறார்கள். அதிலும் புதிய ஐடியாக்கள் இல்லாமல், நிகழ்ச்சியின் போக்கிலேயே சென்று சில டாஸ்க்குகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தலைவியாக பிக் பாஸ் வீட்டில் சர்வாதிகாரம் செய்த ஐஸ்வர்யாவை, நிஜமாகவே சர்வாதிகாரியாக்கி புதிய டாஸ்க் அளித்துள்ளார் பிக் பாஸ்.

லைவ் வீடியோ:
அதோடு போட்டியாளர்கள் மேலும் மோதிக் கொள்ளும் வகையில் தொடர்ந்து குளறுபடியாக வேலைகளையும் பிக் பாஸ் செய்து வருகிறார். அந்தவகையில் ஏற்கனவே பாலாஜி மீது கோபத்தில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு, பாலாஜியின் லைவ் புறணி வீடியோவைப் போட்டிக் காட்டி சூடேற்றினார்.

சிலையை உடைக்க திட்டம்:
அந்த வீடியோவில், ஐஸ்வர்யாவின் சர்வாதிகார போக்கு பற்றி பாலாஜி, ஷாரிக் மற்றும் ரித்விகா ஆகியோர் ஐஸ்வர்யா பற்றி சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஐஸ்வர்யாவின் சிலையை உடைப்பது பற்றி அவர்கள் திட்டமிட்டனர்.

ஷாரிக் பதில்:
அதோடு, ‘தமிழகத்தில் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என அவளுக்குத் தெரியாதா?' என்றார் ரித்விகா. அதற்கு ஷாரிக், ‘அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை' என்றார். அதாவது ஐஸ்வர்யா பெங்காலிப் பெண் என்பதால் அப்படி அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து, ‘அவளை யார்னு அவளுக்கேத் தெரியாது' எனக் கூறினார் பாலாஜி.

மீண்டும் சர்ச்சை:
ஏற்கனவே, இறுதிச்சுற்றில் தமிழ்ப்பெண் தான் வர வேண்டும் என இரண்டு முறை கூறி சர்ச்சையில் சிக்கியவர் ரித்விகா. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவரைப் பற்றி மறைமுகமாகப் பேசி மீண்டும் அவர் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இவர் தான் என அவர் சம்பந்தப்பட்ட தலைவரைக் குறிப்பிடவில்லை என்ற போதும், அவர் கூறியது யாரை என தமிழக மக்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications