பாலாஜியை ஜெயிலில் அடைத்து விட்டு.. ஐஸுக்கு ‘சூப்பர் பவர்’ கொடுத்த பிக் பாஸ்!
டாஸ்கில் நேர்மையாக பதில் சொன்னதற்காக ஐஸ்வர்யாவுக்கு சூப்பர் பவர் அளிக்கப்பட்டது.
சென்னை : 'நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ என்ற டாஸ்கில் மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறியதற்காக ஐஸ்வர்யாவுக்கு சூப்பர் பவர் அளிக்கப்பட்டது.
இந்த வாரம் ஐஸ்வர்யா, பொன்னம்பலம், ஜனனி, தாடி பாலாஜி மற்றும் ரம்யா எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனா காணும் காலங்கள் டாஸ்க்கைத் தொடர்ந்து, நேற்று 'நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ என்ற டாஸ்க் அளிக்கப்பட்டது.
இந்த டாஸ்க்கில் டேனி, நாமினேட் செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் நேர்காணல் நடத்தினார். பிக் பாஸ் கேட்கச் சொன்ன கேள்விகளைத் தொடர்ந்து, மற்ற போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தெளிவான போட்டியாளர்கள்:
அதன்படி, ஒவ்வொருவரிடமும் உங்களை யார்யார் நாமினேட் செய்திருப்பார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஒவ்வொருவரும் தங்கள் மனதில் தோன்றிய போட்டியாளர்களின் பெயர்களைக் கூறினர். இதில் பெரும்பாலானோர் கூறிய பதில்கள் ஏறக்குறைய சரியாகத் தான் இருந்தது. இதன்மூலம் வீட்டில் தங்களுக்கு யார் யார் எதிரி என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் தெரிந்து வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

சூப்பர் பவர்:
இந்த டாஸ்கின் முடிவில், நேர்மையாக பதிலளித்ததாக ஐஸ்வர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் சார்பில் சூப்பர் பவர் ஒன்றை டேனி வழங்கினார். அந்த சூப்பர் பவர் என்ன என்பது குறித்து தெரிவிக்கப் படவில்லை.

கடந்த சீசனிலும்:
நினைவு கூரத்தக்கது. அதைக் கொண்டு தங்களுக்கு பிரியமான ஒருவரை எவிக்சனில் இருந்து காப்பாற்றலாம் எனக் கூறப்பட்டது. இம்முறையும் அதேபோன்ற பவரை ஐஸ்வர்யாவுக்கு பிக் பாஸ் வழங்குவார் எனத் தெரிகிறது.

சிறைக்குச் சென்ற பாலாஜி:
இந்த டாஸ்கில் நேர்மையில்லாமல் நடந்துகொண்டதாக பாலாஜி தேர்வானார். அவருக்கு டேனி சிறை தண்டனை வழங்கினார். பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை வழங்கியபோது பதறிய மற்ற போட்டியாளர்கள் இப்போது ஒன்றும் சொல்லவில்லை. போலீஸ் - திருடன் டாஸ்க் மூலம் அனைவருக்கும் சிறை பழகி விட்டது போலும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications