“எப்படி உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடிக்காம இருக்கு?”.. அனந்த் வைத்தியநாதன் ஆச்சர்யம்!
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்று போட்டியாளர்களிடம் பேசினார் அனந்த் வைத்தியாநாதன்.
சென்னை: பிக் பாஸ் இறுதிச்சுற்றிற்கு வந்த போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன்.
பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன். வீட்டிலேயே அதிக வயதானவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, மற்ற போட்டியாளர்களுடன் அவரால் ஜாலியாக பேசிப் பழக இயலவில்லை.
இதனாலேயே எப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் என ஆவலாக அவர் காத்திருந்தார்.

பொறுமைய சோதித்த பிக் பாஸ்
ஆனாலும் அவர் பொறுமையைச் சோதிப்பது போல் அவரை நான்கு வாரங்கள் பிக் பாஸ் வீட்டிலேயே தங்க வைத்தார் பிக் பாஸ். பின் நான்காவது வாரம் அவர் வீட்டில் இருந்து வெளியேறினார்.

போட்டியாளர்களுக்கு வாழ்த்து
இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய மற்ற போட்டியாளர்களுடன் விருந்தினராக நேற்று அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது பைனலில் இருக்கும் நான்கு பெண் போட்டியாளர்களுக்கும் அவர் வாழ்த்துக்கள் கூறினார்.

பாலாஜியின் மாற்றம்
மேலும், 'பாலாஜியின் மாற்றம் மிகப்பெரிய அதிசயம்' எனப் பாராட்டிய அவர், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் வெளியே வந்தவுடன் நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் கூறினார்.

பைத்தியம் பிடிக்கலையா
அதோடு, ‘இத்தனை நாள் தாக்குப்பிடித்து உங்களால் எப்படி இந்த வீட்டில் இருக்க முடிந்தது?' என்று கேட்ட அனந்த், ‘எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் உள்ளது?' என்றும் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார். மேலும், ஐந்து வாரங்களுக்கு மேல் தான் அந்த வீட்டில் இருந்திருந்தால், சுவற்றை உடைத்தாவது வெளியேறியிருப்பேன்' என நகைச்சுவையாகக் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications