‘பேயா’ டாய்லட்டைக் காத்தும் மும்தாஜுக்கு பிரயோஜனம் இல்லாமப் போய்டுச்சே!
இது எங்க ஏரியா உள்ள வராத டாஸ்கில் மோசமான போட்டியாளராக மும்தாஜும், பொன்னம்பலமும் தேர்வானார்கள்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் எங்க ஏரியா உள்ள வராதே டாஸ்க்கில் சரியாக விளையாட போட்டியாளராக மும்தாஜும், பொன்னம்பலமும் தேர்வானார்கள். அவர்களுக்கு பிக் பாஸ் சிறிய ஷூக்களை சுத்தம் செய்யும் தண்டனையை தந்தார்.
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக எங்க ஏரியா உள்ள வராத அளிக்கப்பட்டது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இருபிரிவாகப் பிரிந்து வீட்டின் முக்கியப் பகுதிகளைப் பிடிப்பதற்கு போராடினர்.

மஞ்சள் அணியின் தலைவியாக மும்தாஜும், நீல நிற அணியின் தலைவியாக ஜனனியும் இருந்தனர்.
பாத்ரூம்:
வீட்டின் பகுதிகளைப் பிடிக்க இரு அணிக்கும் தனித்தனியே சிறிய டாஸ்க்குகள் அளிக்கப்பட்டன. அதன்படி, ஒரு டாஸ்க்கில் ஜெயித்து பாத்ரூம் பகுதியைப் பிடித்தது மும்தாஜ் அணி.
டாஸ்க்குகள்:
இதனால் ஒவ்வொரு முறையும் பாத்ரூம் செல்வதற்கு நீல அணி, மஞ்சள் அணி சொல்லும் டாஸ்க்குகளை செய்ய வேண்டி இருந்தது. ரித்விகா, யாஷிகா போன்றோர் மற்றவர்களின் 'கஷ்டத்தை’ உணர்ந்து கொஞ்சம் இரக்கம் காண்பித்தனர். ஆனால், மும்தாஜோ இது தான் தனக்கு கிடைத்த வாய்ப்பு என எதிரணியினரை வாட்டி வதைத்தார்.
பாட்டு பாடும் டாஸ்க்:
இரவிலும் பாத்ரூம் வாசலிலேயே நின்று காவல் காத்தார். சுமார் ஒரு மணி அளவில் பாத்ரூம் செல்வதற்காக வந்த செண்ட்ராயனை பாட்டுப் பாடச் சொல்லி டாஸ்க் கொடுத்தார். ஆனால், பாத்ரூம் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்த அவருக்கு சரி வர பாட வரவில்லை. ஆனாலும் மும்தாஜ் இரக்கம் காட்டவில்லை.
வாயில் வராத பாடல்:
ஏற்கனவே கடந்த வாரம் கனா காணும் காலங்கள் டாஸ்கில் மும்தாஜுடன் சேர்ந்து செண்ட்ராயனுக்கு, 'செல்பி புள்ள’ பாடல் பாட வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் பாடல் வரிகளை சரிவர பாட வராமல் சொதப்பினார். ஆனாலும் அந்த டாஸ்க்கில் சென்றாயனே மிகச் சிறந்த மாணவராக தேர்வானார்.
மும்தாஜின் கோபம்:
மும்தாஜுக்கு நிறைய மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. செண்ட்ராயனால் தான் தன் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது என்ற கோபம் மும்தாஜிற்குள் இருந்துள்ளது. உள்ளே உறங்கிக் கொண்டிருந்த மிருகம் இந்த டாஸ்க் மூலம் வெளியே வந்து விட்டது.
நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு:
செண்ட்ராயனுக்கு இந்தப் பாடல் பாட வராது என்று தெரிந்தே, அதனை ஐந்து முறை பாடினால் தான் பாத்ரூம் செல்ல அனுமதிப்பேன் எனக் கறாராகக் கூறினார். ஒரு முறையல்ல இருமுறை செண்ட்ராயனுக்கு இதே டாஸ்க்கை வழங்கினார் அவர். அதேபோல், ஐஸ்வர்யாவுக்கு தரையில் படுத்து நீச்சலிக்க வேண்டும் என்ற டாஸ்க் அளித்தார்.
கெட்ட பெயர்:
தனக்கு தண்டனை தரும் போதெல்லாம் உடல்நிலையைக் காரணம் காட்டி இரக்கம் தேடும் மும்தாஜ், மற்றவர்களின் 'அவசரத்தை’ புரிந்து கொள்ளவில்லை. இரவில் பாத்ரூமிலேயே அவர் படுத்து உறங்கினார். அந்தளவிற்கு தன் கடமையில் கண்ணாக இருப்பதாக அவர் காட்டிக் கொண்டார். இதனாலேயே எதிரி அணி மட்டுமின்றி தன் அணியிலும் கெட்ட பெயரை அவர் சம்பாதித்தார்.
கெட்டப் பெயர்:
இதனால், நேற்று பிக் பாஸ் இது எங்க ஏரியா டாஸ்க்கை முடித்து வைத்து விட்டு, மிக மோசமாக விளையாடிய போட்டியாளர் யார் எனக் கேட்டபோது, மும்தாஜ் மாட்டிக் கொண்டார். இரவெல்லாம் காத்திருந்து பாத்ரூமைக் காவல் காத்த அவருக்கு, கெட்டப் பெயர் கிடைத்தது தான் மிச்சம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications