Bigg boss 3 Tamil: தினம் தினம் ஒரு சினிமா.. பிக் பாஸ் வீட்டில்.. 100 நாள் ஷோ!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த டிவியின் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். தினம் இரவு 9:30 மணிக்கு துவங்கி 10:30 மணி வரை ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது முக்கிய சேனல்கள் அதை ஈடு செய்ய பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
நிகழ்ச்சியில் நல்லது சொல்கிறார்களா இல்லை நாம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டுமா என்று கேட்டால் எதற்கும் பதில் சொல்ல முயடியாது. இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்தாலும் அவர்களும் பார்க்கும்படி பார்வையாளர்கள் பெருகி உள்ளனர்.
எப்போதும் நம்ம வீட்டில் என்ன நடந்தது என்பதை விட, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதில்தான் இன்னும் மக்கள் மனதில் ஆர்வம் இருக்கிறது என்பதை உணர்த்தும்படிதான் இந்த நிகழ்ச்சி இருக்கிறது.

தினம் நடப்பதை
தினம் தினம் என்ன நடக்கிறதோ, யார் எதை செய்து மக்களின் மனதில் ஆர்வத்தை தூண்டுகிறார்கள் என்பதை தினம் தினம் ஒரு சினிமா போல சுருக்கி காமிக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் வசிப்பவர்களில் யார் வேணும்னாலும் அன்றைய ஹீரோவாக ஜொலிக்கலாம். இதுதான் அன்றைய ஹவுஸ் மேட்களுக்கான வாய்ப்பு. இதை பயன்படுத்திக் கொண்டு தனித்து தெரிய போட்டி போடுவதுதான் தினம் தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கிறது.

100 நாள் சினிமா
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியில் 100 நாள் சினிமா என்று கொண்டாடலாம் அவ்வளவுதான், இந்த நிகழ்ச்சி மூலம் கடைசிவரை நின்னு ஜெயித்தவர்கள் பெரிய ஆளாவார்கள், மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. தினம் ஒரு சினிமா பார்ப்பது போல கடைசி 100 வது நாள் ஷோவையும் பார்த்துட்டு மக்கள் மறந்து போவார்கள்.

தனித் தன்மை
பிக் பாஸ் கடந்த இரண்டு சீசன்களில் முதல் சீசனில் ஜெயித்த ஆரவ் இன்னும் ஒரு படம் கூட கொடுக்கவில்லை. இரண்டாவது சீசனில் டைட்டில்; வின் செய்த ரித்விகா என்ன படத்தில் நடிக்கிறார் என்று கூட தெரியவில்லை. டைட்டில் வின்னர் என்பதால் மட்டும் வாய்ப்புக்கள் தேடி வருவதில்லை. தனித் திறமை, தனித் தன்மை காண்பிக்கும் களமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹவுஸ் மேட்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிக் பாஸ் சுவாரஸ்யம்
பல குணங்களை கொண்ட மனிதர்கள் ஒன்றாக வாழும் கூட்டு குடும்பம் போல பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க மக்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. இதுதான் மொத்தத்தில் மக்களுக்கு பிக் பாஸ் தரும் சுவாரஸ்ய விருந்து. தினம் ஒரு புது படம் பார்ப்பது போல உணர வைக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications