Bigg Boss 3 Tamil: சேரன் நாங்களும் படம் எடுப்போம்ல.. நாளைக்கு சேரன் குறும்படம்!
சென்னை:விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த சேனலுக்கே மகுடம் போன்ற நிகழ்ச்சி. காரணம் அத்தனை வரவேற்பு மக்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு இருந்து வருகிறது.
இது ஒன்னும் அடுத்த வீட்டு விவகாரத்தை ஒட்டுக் கேட்கும் நிகழ்ச்சி இல்லை.வெளியாள் பார்க்க வெட்ட வெளிச்சமாக வெளிப்படையாக நடக்கும் ஒரு நிகழ்ச்சி.
இதிலும் சிலக் கட்டுப்பாடுகளை ஹவுஸ் மேட்ஸுக்கு வைத்துதான் உள்ளே அனுப்பி வைத்திருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆட்கள் குறைய குறைய ரொம்பவும் விறு விறுப்பாக இருக்கிறது.

கேரக்டரில் யார்?
இந்த வாரம், ஒவ்வொரு நடிகர் நடிகைகளையும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸுக்கு கொடுத்து, அந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை, ஹவுஸ் மேட்ஸ் தங்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த நடிகர் நடிகையின் மேனரிசத்துடன் நடந்துக்க வேண்டும். இப்படி இந்த டாஸ்க் முடியும் கட்டத்தில்தான் யார் கடைசிவரை கேரக்டரில் இருந்தாங்க,யார் சரியா இல்லைன்னு பிக் பாஸ் கேட்டாங்க.

முகேன் மதுமிதா
ஒரு மனதாக மதுமிதா, சாண்டி, முகேன் என்று ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் மூவருமே பிக் பாஸ் ஹவுஸின் அடுத்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிடலாம்.சரியாக செய்யாதது யார் என நினைக்கிறீர்கள் என்று பிக் பாஸ் கேட்டபோது தான், சாண்டி சேரன் என்று சொல்ல பிரச்சனை வாய்த் தகராறில் முடிந்தது.

சரவணனை உடனே
உடனே சரவணன் சரியா செய்தாரா.. இதை முதலில் கேட்டு சொல்லுங்கள் என்று சரவணனை போய்யான்னு சேரனை சொல்லவில்லை, கேப்டன் தர்ஷனைத்தான் சொன்னார். வந்ததில் இருந்தே சரவணனுக்கும், சேரனுக்கும் இடையில் பனிப்போர் நடந்துகொண்டுதான் இருந்தது. இதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை சரவணன். காண்பித்துவிட்டார் சேரன். அவ்வளவுதான், வித்தியாசம்.

ஆர்க்யூமென்ட் செய்தவர்
மகாநதி படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த சேரன், நம்மவர் கமல் ஹாசனிடமே இதுதான் கன்டினியூட்டி உடை என்று வாதிட்டவர் சேரன். இல்லை என்று கமல் சொல்ல இதுதான் அழுத்தமாக என்று வாதம் வைத்த சேரனிடம், முதல் நாள் ஷூட்டிங்கில் தான் அணிந்திருந்த உடையை போட்டோவில் எடுத்து காண்பித்து உண்மையை சேரனிடம் நிரூபித்தவர் நம்மவர். நாளைக்கு சொல்லுய்யான்னு சேரனை சொன்னாரா, தர்ஷனை சொன்னாரான்னு குறும்படம் போடப் போறார் கமல்.
மூக்குடைந்து நிற்கப் போறார் சேரன்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications