Bigg Boss 3 Tamil: கண்ட பலன் ஒன்றும் இல்லை.. கற்ற பாடமும் ஒன்றுமில்லை!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஷோ. அந்த நேரத்தில் மற்ற சேனல்கள் தங்களது வியூவர்ஸை தக்க வச்சுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டும், பிக் பாஸ் ரேட்டிங் குறையவில்லை.
இப்படி நிலைமை இருக்க, பிக் பாஸ் 3 வது சீசன் இழுத்துக்க பறிச்சுக்கன்னுதான் இருக்குது. திடீர்னு சூடு பிடிக்குது. திடீர்னு அடங்கிருது. சுவாரஸ்யமான டாஸ்க் இல்லை என்று வியூவர்ஸ் குறை கூறுகிறார்கள்.
அதோடு, கமல் இன்னிக்கு பட்டையை கிளம்புவார் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்போம்.. அன்னிக்கு கமல் எதுவும் பேசாமாட்டார். இதுதான் எல்லை என்று ஒதுங்கிக் கொள்கிறார் போலும்!

கற்ற பாடம்
கவினுக்கு எல்லா விதமான பொழுது போக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கின்றது. சாண்டி தாளம் போட்டு பாட்டை ஆரம்பித்து விட்டால், பாத்ரூம் ஏரியா கிடுகிடுக்கும். ஆனால், இதெல்லாம் இப்போது இல்லை. காரணம் கவின் லாஸுடன் நேரத்தை கழித்தார். சாக்ஷி பிரச்சனையில் அவ்வளவு சிக்கி, கண்ணீர் விட்டு கதறி அழுதும் கவின் கண்ட பலன் ஒன்றும் இல்லை. கற்ற பாடமும் ஒன்றுமில்லை.

வாய்ப்பு சாண்டி
கவினை திசை திருப்பி தன்பக்கம் இழுக்க நல்ல வாய்ப்பு இருந்தும், சாண்டி அதை செய்யவில்லை. இப்போது கவினை ஓபன் நாமினேட் செய்துவிட்டு, பின்னர் அழுவது, சும்மா என்பது போலாகிவிட்டது. நண்பன் என்று சொல்லிக் கொண்டு, இதை கூட செய்யத் தவறி விட்டார் சாண்டி. அப்படி பார்க்கையில் பிக் பாஸ் இல்லத்தில் சாண்டி ஒரு யுக்தியை கையாண்டு விளையாடுவது போலத்தான் தோன்றுகிறது.

ஷெரீன் சாக்ஷி
சாக்ஷி கவின் மீது கொண்ட காதல், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிளவால் அவ்வப்போது அழும்போது, அவரது மனதை மாற்றி இதமாக அவருக்கு ஆறுதல் சொல்லி, தேற்றியது தோழி ஷெரீன்.இப்படிப்பட்ட பக்குவம் சாண்டிக்கு வராமல் போனது எதனால்? எப்போதும் ஒன்றாக இருக்கும் நான்கு நண்பர்கள் இப்போது அப்படி இல்லை.

ஸ்டடி ரெடி
இப்போது இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் எட்டு பேரும் போட்டிக்குத் தயாராகி உள்ளனர் என்றுதான் நேற்று நடந்த விஷயம் உணர்த்துகிறது. இதில் கவின் எப்போதும் சோம்பேறியாக படுத்து கிடப்பது , உட்கார்ந்து இருப்பது என்று ஒரு சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறார். ஒருவேளை நண்பனை ஜெயிக்க வைக்கும் யுத்தியாக இது இருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications