Bigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பார்த்து பண்ணுங்கப்பா!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த டிவியின் மற்ற நிகழ்ச்சிகளை விட அதிகப் பார்வையாளர்களை பெறவில்லை என்பதுதான் உண்மை.
எல்லாரும் ஆட்கள் குறைய குறைய நிகழ்ச்சி போரடிக்குது என்று, பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை. இன்னும் மூன்று வாரம் சீக்கிரம் போய்விடாதா என்று கூட மலைக்க வைக்கிறது.
எல்லாரையும், எல்லார் வீட்டாரும் வந்து பார்த்துவிட்டு போயாச்சு. சொல்ல வேண்டிய அறிவுரைகளை சொல்லிட்டுப் போயிட்டாங்க. இதில் லாஸ்லியாவுக்கு அவங்க அப்பா சொன்ன அட்வைஸ்தான் மகுடம்.

கவின் ஏன்?
பத்து வருஷமாக பார்க்காத இருந்த பெண்ணை, பிக் பாஸ் வீட்டினுள் வந்து பார்க்கிறார் அப்பா. எத்தனை மன உளைச்சலுடன் வந்திருப்பார். முதலில் என்ன செய்துகிட்டு இருக்கேன்னுதான் ஒரு கேள்வி கேட்டார்.இது பெண்களைப் பெற்ற எல்லா அப்பாக்களுக்குமான பெரும் ஷாக். லாஸ்லியா எப்படி வேதனை பட்டு இருப்பார்.

காதலுடன் பேச்சு
அன்னிக்கு என்னவோ என்னாலதான் எல்லாம் என்று கதறி கண்ணீர் விட்டார்.நேத்து மீண்டும் தனது சில்மிஷத்தை ஆரம்பிச்சுட்டார்.இவருக்கு எப்படி இத்தனை நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்?ஆச்சரியம்தான். முகத்தை உம்முன்னு வச்சுக்கிட்டு, அன்னிக்கு ஒரு வார்த்தை சொன்னே அதோடேயே முடிச்சுக்கிட்டு இருந்திருக்கலாம். இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டு,இப்போ இப்படி நடந்துகிட்டா எப்படின்னு இன்னும் லாஸுடன் காதலைத் தொடரும் முயற்சியில் இருக்கார். .

அக்கா தங்கை
கவின் உனக்கு அக்கா தங்கை இல்லையா? லாஸ் எப்படி தெளிவாகி இருக்கார்... அவரை மன குட்டையை குழப்பி, இன்னும் காதல் என்கிற மீனை பிடிப்பதில் குறியாக இருக்கிறீர்களே.. எத்தனை பெண்கள்தான் வேணும் உங்களுக்கு? லிவிங்க் டுகெதர்ல வாழ்ந்தாச்சு..இங்கேயும் சாக்ஷியுடன் நூல் விட்டாச்சு. லாஸுக்கு நெருக்கமாகி காதல் என்று விழ வச்சாச்சு,

நூல் இன்னும்
யாரை சொல்றேன்னு இன்னும் உனக்கு புரியலையான்னு சேரன் சாரை வேறு இழுக்கிறார். என்னங்க உங்க குணம்? இத்தனை இழிவான குணத்தில் எப்படி பெரிய ஆளா ஆனீங்க கவின். இது என் கேள்வி அல்ல, பொது மக்கள் கேள்வி. லாஸ்லியா நார்மல் நிலைமைக்கு வந்துட்டார். இப்போது வேணும்னே லாஸை வெறுப்பேத்த ஷெரீனுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். ஷெரீன் நன்றாக விளையாடுவது கவினுக்கு பிடிக்கலையா, இல்லை இவரை வச்சு பிக் பாஸ் வீட்டில் தங்கிக்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ.
மக்களே தயவு செய்து ஓட்டு போடுவதற்கு முன் யோசித்து போடுங்கள்!
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications