பிக் பாஸ் 3 : அபி மீது மது பாய ‘பாட்டில் குழந்தை’ மட்டும் காரணமல்ல.. இன்னும் நிறைய இருக்கு!
அபிராமி மீது மது கோபப்பட்டதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.
Recommended Video
சென்னை: மனதில் பட்டதை பட்டென்று பேசும் கேரக்டரான மதுமிதா, அபி மீது கோபப்பட 'பாட்டில் குழந்தை’ மட்டும் காரணம் அல்ல என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு நன்றாகவே புரியும்.
பிக் பாஸ் வீட்டில் நேற்று பாத்திமா பாபுவை செய்தி வாசிக்கச் சொன்னார் கமல். அப்போது அபி, தனது வாட்டர் பாட்டிலை தனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை எனக் கூறி வருவதாக செய்தியாக வாசித்தார் பாத்திமா. அதனை ஏன் கூறினீர்கள் என மது நல்ல எண்ணத்தில் கேட்கப் போக, கடைசியில் அது அவருக்கே வினையாகிப் போனது.
அதெப்படி தமிழ்ப் பொண்ணு எனக் கூறலாம் என அபியும், ஷெரீனும் வரிந்து கட்டிக் கொண்டு வர, பின் அவர்களுடம் மற்ற போட்டியாளர்களும் சேர்ந்து கொண்டனர். இதனால் தனிமையில் தள்ளப் பட்டுள்ளார் மது.

சட்டென மாறிய காதல்:
ஆனால், மது இப்படி அபியைப் பற்றி பேசியது தவறே இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள். வீட்டிற்கு வந்த நாள் இரவே கவினைக் காதலிப்பதாகக் கூறினார் அபி. ஆனால் பின்னர் அவர் அதற்கு ஒத்து வர மாட்டார் என சத்தமில்லாமல் ஆளை மாற்றி விட்டார். இப்போது முகெனைத் தனது காதலர் என்றல்ல, கணவர் என்றே கூறி வருகிறார்.

பாத்திமா பாபு:
இதனால் தனது வாட்டர் பாட்டிலை முகெனுக்கும், தனக்கும் பிறந்த குழந்தையாக பாவித்து, அதற்கு நேப்பி மாட்டி விடுவது முதற்கொண்டு எல்லா வேலைகளையும் அவர் செய்து வருகிறார். ஆனால், இதனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை காட்டவேயில்லை. நேற்று பாத்திமா பாபு சொன்னபிறகு தான் இது பூதாகரமாகியுள்ளது.

மீரா மீது பகை:
இதற்கு முன்னர் மீரா வீட்டிற்கு வந்த நாளன்று, அவரிடம் முகம் கொடுத்துக் கூட பேசாமல் இருந்தவர்கள் தான் அபியும், சாக்ஷியும். அப்போது மீரா ஏதோ பெரிய பிராடு என்ற ரேஞ்சுக்கு அவர்கள் பேசினார்கள். பின்னர் மீராவுக்கும் தங்களுக்கு ஏதும் பகையே இல்லை என பிளைட்டேயே மாற்றி போட்டு விட்டனர்.

ஏற்றுக் கொள்ளமுடியாது:
இதேபோல், பல விசயங்களில் முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் நடிப்பது பார்க்கும் மக்களாலேயே ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஒரு ஆணை காதலர் என்று விளையாடுவதே தவறு, இதில் அவருடன் கற்பனையில் குடும்பம் நடத்தி வாட்டர் பாட்டிலை பிள்ளையாக பெறுவதெல்லாம் டூ டூ மச். இன்னும் நம் சமூகம் அந்தளவுக்கு மனமாற்றம் அடைந்து விடவில்லை.

தமிழ்ப்பொண்ணு பிரச்சினை:
இதைத்தான் மதுவும் சொல்ல நினைத்தார். அதற்காக அவர் கையில் எடுத்துக் கொண்ட வார்த்தை தான் தமிழ்ப்பொண்ணு. ஆனால், அதையே அவருக்கு எதிராக திருப்பி விட்டு விட்டனர். மீரா அழுத போது அவருக்கு சாக்ஷியும், அபியும் ஆறுதல் சொன்னது பற்றி எப்படி மதுமிதா விளக்கம் கேட்டாரோ, தற்போதும் அதேபோல் அவர் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். ஆனால் போட்டியாளர்கள் தான் பேனைப் பெருக்கி பூதாகரம் ஆக்கிவிட்டார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications