Bigg Boss 3 Tamil: ஹவுஸ் மேட்ஸுக்கு ஷெரீன் நல்லா முடி வெட்டிவிடுகிறார்! சூப்பர்!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு நிறுத்தாமல் அவர்களும் விமர்சித்தும் விவாதித்தும் வருகிறார்கள்.
நாலு மனிதர்கள் எப்போதும் நல்லவர்களாக நம்மை சுற்றி இருக்க வேண்டும் என்பதற்கு பிக் பாஸ் ஷோ ஒரு உதாரணம். வெளி உலகம் தெரியாமல் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிலர் மட்டுமே இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்.... அவர்கள் மன நிலை என்னவாக இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
அதற்குத்தான் வீட்டையும் தாண்டி வெளி உலகம் என்கிற ஒரு அற்புதமான உலகத்தை இயற்கை மனிதர்களுக்கு அளித்து இருக்கிறது. மனிதர்கள் நல்ல மனிதர்களை சம்பாதிப்பது எத்தனை அவசியம் என்று புரிகிறது.

சுலபமாக கிடைத்தால்
எந்த ஒரு விஷயமும் சுலபமாக கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு தெரியாமல் போயிரும் என்று நேற்று சேரன் வனிதாவிடம் கூறிக்கொண்டு இருந்தார். எதற்காக இதை அவர் சொன்னார் என்றால், ஒன்றாக சுற்றித் திரிந்த கவின் லாஸுக்குள் ஏதோ பிரச்சனை. இவளுக்கு சொன்னாலும் புரிய மாட்டேங்குது... மெச்சூர்ட் இல்லாமல் இருக்கிறாள் என்று சொல்கிறார் சேரன். எதுவுமே எளிதாக கிடைத்து விட்டால் அதன் மதிப்பு தெரியாமல் போயிரும் என்றும் சொன்னார்.

சிக்கன் வேண்டும்
நேற்று சிக்கன் வேண்டும் என்று ஹவுஸ் மேட்ஸ் போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டு விட்டார்கள். இப்படித்தான் சாக்லேட்ஸ், கேக்,வேறு சாப்பிடும் பொருட்கள் கொடுத்தால் ஹவுஸ் மேட்ஸ் ஆசையாக ஓடி சென்று எடுத்து சாப்பிடுவது என்று, உணவுப் பொருட்களின் மதிப்பை உணர்த்தி வருகிறார்கள்.

ஷெரீன் நடிகை
நடிகை ஷெரீன் ஆண்களுக்கு நன்றாக முடி வெட்டி விடுகிறார். பெண்களுக்கு முடி வெட்டி விடுவது என்பது கூட சுலபம். ஆண்களுக்கு முடி வெட்டுவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். இந்த காரியத்தை வெகு எளிதாக செய்துவிடுகிறார் ஷெரீன். முன்பு ஒரு நாள் தர்ஷனுக்கு தலை முடி வெட்டி விட்டார். அடுத்து சாண்டிக்கு வெட்டி இருக்கார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி
மொத்தத்தில் நிஜமா பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய விஷயங்களை பார்ப்பவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் விதமாகத்தான் இருக்கிறது. இனி தாய்மார்கள் கடைக்கு குழந்தைகளை அழைத்து சென்று முடி வெட்டும்போது,அவர்கள் எப்படி வெட்டுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள்.நமக்கு நாமே முடி வெட்டிக்கலாம் பாருங்க!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications