Bigg Boss 3 Tamil: மழுப்பி சென்ற கவின்.. மாட்டிக் கொண்டார் இன்று!
Recommended Video
சென்னை: பணம்தான் மனிதனுக்கு முக்கியத் தேவை என்று இல்லாமல் இருந்தாலும், வாழ்வியல் என்று வரும்போது பணம் முக்கியத் தேவை ஆகிவிடுகிறது. அது பலரையும் பல விதத்தில் ஆட்டுவித்தாலும் கடனில் ஆட்டுவிப்பது என்பது பெரும் சோகத்தில் கூட முடிந்து விடுகிறது.
கவின் தான் கடனில் உள்ளதாகவும், பணத் தேவைக்காகத்தான் பிக் பாஸ் ஹவுஸ் வந்ததாகவும் சொல்லி இருக்கார்.
அதே போல அவருக்கு தேவையான பணம் கிடைத்துவிட்ட பட்சத்தில் பூடகமாக பேசி நழுவிவிட்டார். விட்டுக் கொடுத்து கிளம்பி விட்டது போல மாயையும் உண்டாக்கி சென்று இருக்கார்.

சாண்டி கவின்
கவின் முதலில் எழுந்து 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, தல நான் ரெடி தலன்னு சொன்னபோது, ஹவுஸ் மேட்ஸ் லாஸ்லியா,கவின் விருப்பம் தெரிவிக்கவில்லை. கடைசியாக நானும் கிளம்பறேன்.. எனக்கும் பணம் தேவை என்று சாண்டி அப்பட்டமாக உண்மையை பேசினார். அப்போது பதில் அளித்த கவின், நான்தான் முதலில் எழுந்தேன் என்று கூறினார்.

முகமூடி நட்பு
அப்படிப் பார்க்கும்போது , பணம் முக்கியம் என்பதையும், பணத் தேவை என்பது கவினுக்கு இருக்கிறது என்பதாலும் கவின் கிளம்புகிறார் என்பது சாண்டிக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால், அதை அவரும் மனம் விட்டு சொல்லாமல், என்னவோ கவினை மிஸ் பண்ணுவது போல நடிக்கிறார். இது முகமூடி நட்பு என்று நமக்கே புரிகிறது.

ஆசை இல்லையாம்
லாஸ்லியா கவின் போவதை விரும்பாமல் அவ்வளவு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அவரிடமாவது தனக்கு பணத்தேவை இருக்கிறது என்கிற உண்மையை சொல்லி இருக்கலாம். எனக்கு ஸ்டேஜ் ஏற ஆசை இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். சாண்டி என்னவோ, உனக்காகத்தான் அவன் விட்டுக் கொடுத்து கிளம்பி இருக்கிறான்.. நீ அழுதுகிட்டே இருக்காதேன்னு புதுக்கதை கூறுகிறாரே.

முகேன் தர்ஷன்
அது மட்டுமில்லை.முகேனிடமும் என்னவோ விட்டுக்கொடுத்து கிளம்புவது போல பேச, உங்க டிசிஷனுக்கும் நாங்க விளையாடுவதற்கும் சம்பந்தமில்லை அண்ணா. நீங்க இருக்கமாட்டேன்னு உங்க சூழ்நிலை காரணமா கிளம்பறீங்கன்னு சொன்னார்.அவர்களுக்கும் என்னவோ விட்டுக் கொடுத்து கிளம்புக்து போல பாவனை செய்து கவின் கிளம்பி இருக்கார். இந்த கில்டி ஃபீலிங் தர்ஷனுக்கும்,முகேனுக்கும் இருக்கும்தானே?

ஏன் கவின்?
கவின் ஏன் கிளம்பினார் என்று வாக்களித்த மக்களுக்கு அவர் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று பிக் பாஸ் நினைத்தது போலும்.அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும் கூட. இதோ இன்று கவின் வந்து கமலுடன் பேசப் போகிறார். இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் கவின் ஏன் கிளம்பினார் என்ற ஒரு கேள்வியை கமல் கேட்டுள்ளார். அதனால், கவின் கமலுடன் பேசிய பிறகே வீடு செல்வார் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள். இதை தெளிவு படுத்த வேண்டியது கவினின் பொறுப்பும் கூட.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications