Bigg boss 3 tamil: அடடா சேரனை பகைத்துக் கொண்ட சாண்டி.. என்னாகுமோ.. ஏதாகுமோ?
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இளையவர்களுக்கான நிகழ்ச்சி மட்டும் இல்லை. என்னை மாதிரி, கஸ்தூரி மாதிரி ஆட்களும் ஜெயிக்கலாம். உடல் பலத்தை நிரூபிக்கும் போட்டி அல்ல என்று இயக்குநர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சாண்டி யங்கர்தான்.. அவரை தங்களது லிஸ்டில் சேரன் ஏன் சேர்த்துக் கொண்டார் என்று தெரியவில்லை. ஆனாலும் இயக்குநர் சேரனுக்கு சினிமா உலகின் மாபெரும் சப்போர்ட் உள்ளது என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை.
ஒட்டு மொத்த தமிழ் திரையுலக இயக்குநர்களின் ஒரு பிரமுகராகத்தான் பிக் பாஸ் இல்லத்தில் அவர் வலம் வந்துகொண்டு இருக்கிறார். இதையும் மறுப்பதற்கில்லை.

கவின் சாண்டி
பிக்பாஸ் இல்லத்தில் சாண்டி ஒரு நகைச்சுவையாளரா தெரிந்தாலும், டாஸ்க் என்று வந்துவிட்டால் கில்லி மாதிரிதான். கவின் மக்களின் பேராதரவால் நாமினேட் ஆனாலும் தப்பித்து வருகிறார். இந்த நிலையில்தான் லாஸ்லியாவுக்கு சாண்டி, கவின் இருவரும் போட்ட பாடலில் சேரன் அப்பா பேசினா ரொம்ப போருன்னு ஒரு வரியை சேர்த்து பாடிட்டாங்க. அப்போதே சேரன் அப்செட் ஆகிட்டார்.

சேரன் சாண்டி
சேரன் சாண்டியைத் தனியாக அழைத்து, உங்களிடம் நான் எப்போதாவது அதிக நேரம் பேசி இருக்கேனா என்று கேட்டார். இல்லை என்ற சாண்டிக்கு அப்போதுதான் தன் தவறு புரிந்தது. எப்போதாவது அட்வைஸ் பண்ணி இருக்கேனான்னு கேட்டார்.அப்போதும் இல்லை என்று சொன்னதும், பின்னே எதுக்கு அப்படி பாடினீங்க.? நான் யாரு எப்படிப்பட்ட இடத்தில் இருக்கேன்னு தெரியுமா? என் அனுபவங்கள் உங்களுக்கு பாடமாக இல்லை என்றால் தூக்கி குப்பையில் போடுங்கள். அதுக்காக இப்படி ஹர்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டார்.

ஊர் வாயை மூட முடியுமா?
இதை கவின், தர்ஷனிடம் சொல்லிய சாண்டி, கவினையும் சேரனிடம் மன்னிப்பு கேட்க சொல்லி சாண்டி அனுப்பி வைக்க, அப்போதும் சேரன் இதையே சொன்னார். உண்மையில் வெளி உலகில் பேச்சு இருப்பது சேரனை பகைத்துக் கொண்டால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்பதுதான். அது சரவணன் விஷயத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்.. உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது என்பதுதான் சேரன் வலிமை பற்றிய மக்களின் கருத்து.

கவின் சாண்டி
சாண்டியும் கவினும் வளரக் கூடிய, வளர வேண்டிய பிள்ளைகள். அதே சமயம் சாண்டி ஸ்ட்ராங் கன்டெஸ்டன்ட்.. இவர் இப்போது சேரனை பகைத்துக் கொண்டது போல ஆகிவிட்டது. என்னதான் மன்னிப்பு கேட்டாலும் சேரனின் பின்புலம் என்பது மிகவும் வலிமை வாய்ந்தது. இப்போது சேரன் மனதளவில் ஹர்ட் ஆகி புயல் என மய்யம் கொண்டுள்ளார். இந்த புயல் வீசுமா, இல்லை வெறுமனே கடந்துவிடுமா பார்க்கலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications