Bigg Boss 3 Tamil: தன் வினை தன்னை... பேர் வச்ச விஷயத்தில் உண்மையாகிப் போச்சே!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 58 : கஸ்தூரியை வெச்சி செஞ்ச வனிதா- வீடியோ

    சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ சூப்பர் ஹிட் நிகழ்ச்சி. இதன் பெருமையை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் புரிந்துக் கொண்டு இருப்பதாகத் தெரியவில்லை.

    பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸுக்கு என்னங்க டாஸ்க் குடுக்கறீங்க? கிண்டர் கார்டன் சைல்ட் வேஷத்தை போட்டு, அட்லீஸ்ட் 10 வது பிளஸ் 2 படிக்கற மாணவர்களாக டாஸ்க் குடுத்து இருக்கலாம்.

    நிஜமா கிண்டர் கார்டன் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்க்கறதில்லை. வீணாக ஏன் இந்த மாதிரி டாஸ்க்ஸ் எல்லாம்.எங்களால பார்க்க முயடியலை.

    கஸ்தூரி டீச்சர்

    கஸ்தூரி டீச்சர்

    டீச்சர் வேஷத்துக்கு பொருத்தமாக கஸ்தூரியும், ஹெட் மாஸ்டர் வேஷத்துக்கு சேரனும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதல். மத்தவங்களை பார்க்க முடியலைங்க. பள்ளி மாணவர்களுக்கே கற்றுக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கையில், நீங்கள் ஏன் கிண்டர் கார்டன் குழந்தைகளை வச்சு டாஸ்க் குடுக்கறீங்க. பார்க்கறவங்க கஷ்டத்தையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க.

    டம்மி பீஸும்

    டம்மி பீஸும்

    வாத்து...வாத்து பாடல் சொல்ல வனிதா நீங்க வாங்கன்னு நேரடியாவே கிண்டல் செய்த கஸ்தூரி ஒன்றும் அறியாதவர் போல நடிக்கிறார். வனிதா சாரி கேட்கும் வரை விடவில்லை.அத்தோடு நின்றுவிட்ட விஷயத்தை, மத்தவங்களிடம் உங்களுக்கு எப்படி தோணுச்சு..எப்படி தோணுச்சுன்னு கேட்கறது அப்பாவி மாதிரி இருந்தாலும், நீங்க யார் யாரை எப்படி கிண்டல் அடிச்சு எழுதி இருந்தீங்கன்னு பார்த்து படிச்சுட்டுத்தான் வந்திருக்கோம் என்று வனிதா போட்டாரே ஒரு போடு.

    தூக்கம் கஸ்தூரி

    தூக்கம் கஸ்தூரி

    டாஸ்க் நேர இடைவெளியில் கஸ்தூரி தனது புடவை முந்தானையில் கண்களை மறைத்துக் கொண்டு உறங்கிவிட்டார். திடீரென்று துப்பகக்கிச் சூடு. படக்கென்று விழித்துக்கொண்டு திரு திருவென்று விழித்துக் கொண்டு இருந்த கஸ்தூரியிடம் தூங்கிட்டீங்களா என்று சேரன் கேட்க, இல்லை அடுத்து என்ன பாடம் எடுக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்னு படபடக்க, எதுக்கு இப்படி படபடப்பு.. தூங்கினால் என்ன, அதான் எழுப்பிட்டாங்களேன்னு சாதாரணமா சொல்லிட்டு போயிட்டார்.

    நல்ல நடிகை

    நல்ல நடிகை

    நடிகை கஸ்தூரி நல்ல நடிகை அவ்வளவுதான், இவருக்கு அது சரிப்பட்டு வராது. அரசியல் பற்றி பேசுவதோ ,நாலு பேருடன் எதிர்த்து நிற்பதோ சத்தியமா முடியாது. பிக் பாஸ் ஹவுஸுக்கு இவர் ஒரு டம்மி பீசுன்னு தினம் தினம் நிரூபிக்கிறார். நல்ல இளகிய மனம் கொண்ட பெண்மணியும் கூட. பிக் பாஸ் ஹவுசில் மாட்டிகிட்ட கஸ்தூரியை பார்க்க பாவமா இருக்குது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+