மேடையில் அமீரை அந்த வார்த்தை சொல்லி கலாய்த்து தள்ளிய ராஜு.. கைத்தட்டி சிரித்த பாவனி
சென்னை: பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் கொண்டாட்டத்தில் அமீரை, ராஜு பங்கம் இல்லாமல் மேடையில் கலாய்த்து தள்ளியுள்ளார்.
இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அமீரைப் பற்றி இப்படி ராஜு பேசியதை கேட்டதும் பாவனி கைதட்டி சிரித்து உள்ளார்.

ஐந்தாவது சீசனின் வின்னர்
சின்னத்திரையில் அறிமுகமாகி தன்னுடைய நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு தற்போது ஐந்தாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, கடைசியில் அந்த சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார் ராஜூ. தற்போது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலக்கி இருக்கிறார். ராஜாவின் சூப்பர் டான்ஸ் பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து வருகிறார்கள். இந்த எபிசோடுகள் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கின்றது.

யாருக்கும் இது போல் கிடைத்ததில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை மட்டுமல்லாமல் போட்டியாளர்களின் மனதை கவர்ந்த ஒரே வெற்றியாளர் என்றால் அது ராஜு மட்டும். இதுவரைக்கும் நடந்த 4 சீசன்களில் வெற்றி பெற்ற போட்டியாளர்களில் யாருக்கும் இந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் இடம் மரியாதையும் பாசமும் இருந்ததில்லை. ஆனால் ஐந்தாவது சீசனின் வெற்றியாளரான இவரிடம் போட்டியாளர்களும் பாசத்தை உருகி வருகிறார்கள். ஆரம்பம் முதலே இவருக்கு ரசிகர்கள் எவ்வளவு சப்போர்ட் கொடுத்து வருகிறார்களோ அந்த அளவிற்கு போட்டியாளர்களும் இவரை ரசித்து வந்தனர்.

தொடங்கிய பிக்பாஸ் கொண்டாட்டம்
இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாதவகையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஆரம்பம் முதலே போட்டியாளர்களுக்குள் ஒற்றுமை இருந்து வந்தது. ஒரு சில நேரங்களில் இவர்கள் அடித்துக் கொண்டாலும் பல நேரங்கள் ஒற்றுமையாக தான் இருந்து வந்தனர். அதனாலே இந்த சீசன் வித்தியாசமாக இருந்தது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இருந்தாலும், மீண்டும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இணைந்திருக்கின்றனர். அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் ராஜு டான்ஸில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
Recommended Video

கானா பாடலால் கலாய்ப்பு
பிக் பாஸ் வீட்டிற்குள் அண்ணன் தம்பி போல பழகி வந்த அமீரை பற்றி கானா பாடலுக்கு தன்னுடைய குத்து டான்ஸோடு ராஜூ தனக்கே உரிய நக்கல் தனத்தோடு கலாய்த்து இருக்கிறார். 'அமீரு, பிக்பாஸ் வீட்டிற்குள் போனியப்பா டான்ஸரா... கடைசில பாவனிக்கு ஆகிட்டப்பா பவுன்சரா... பவுன்சரா' என்று பாட்டு பாடி கலாய்த்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாவனி கைதட்டி சிரித்து உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ராஜூ, பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அபிநயை கலாய்த்தார். இப்போ அமீரா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அமீர் பாவனி பற்றி மட்டும் ராஜூ எதுவும் பேசவில்லையே எதனால் இருக்கும் என்பதும் பலருடைய சந்தேகமாக இருந்து வருகிறதாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications