முதல் நாளிலே வேலையை காட்டிய நிரூப்...இவர் இசைவாணி அல்ல.. நெட்டிசன்கள் கலாய்ப்பு
சென்னை: நிரூப் தனக்கான வேலையை சரியாக செய்ய ஆரம்பித்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த வாரம் இசைவாணி செய்ய தவறியதை இவர் சரியாக செய்யத் தொடங்கியிருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இசைவாணி தனது அதிகாரத்தை செயல்படுத்திய போது எதிர்த்த போட்டியாளர்கள் தற்போது நிரூப்பின் முன்பு அமைதியாக மாறிவிட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நிலத்தின் ஆற்றல்
காயின் டாஸ்க் மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் நன்றாகவே கொளுத்தி போட்டு இருக்கிறது. அதனால் நாலாபுறமும் நன்றாக கொழுந்துவிட்டு எரிகிறது. ஒவ்வொரு வாரமும் இனி ஒரு சக்தியின் ஆற்றலை இந்த வீடு சந்திக்க போகிறதோ இல்லையோ ஒவ்வொரு போட்டியாளர்களின் கேரக்டரை நன்றாக ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தற்போது அனைவரும் உணர்ந்து விட்டார்கள். போன வாரம் முழுக்க இசைவாணி வசம் இருந்த நெருப்பு ஆற்றில் இந்த வாரம் நிலத்தின் ஆற்றலாக மாறி இருக்கிறது.

நிரூப் வசம் பிக்பாஸ் வீடு
ஐம்புலன்களின் ஆதிக்கத்தால் இந்த பிக்பாஸ் வீடு இயங்கும் என்பதை சொல்லாமல் சொல்லியது பிக்பாஸ். முதல்வாரத்தில் நெருப்பின் ஆற்றலைத் தூண்டி எடுத்திருந்தார். ஆனால் நெருப்பு அந்த அளவிற்கு பிரகாசமாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது நிலத்தின் ஆற்றல் அனைத்தையும் விட சிறப்பாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. நிலம் காயினை வைத்திருக்கும் நிரூப்பின் வசம் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு ஒப்படைக்கப்பட்டுள்ளது .

நிரூப்பின் ஆட்டம் தொடக்கம்
ஏற்கனவே போன வாரம் இசையிடம், நிரூப் தன்னிடமும் காயின் இருக்கிறது எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது என்ன பண்ணுகிறேன் என்று பார் எனறு வம்பிழுத்த நிரூப் தற்போது அதை அப்படியே நிரூபிக்க ஆரம்பித்துவிட்டார். தன் மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் போட்டியாளர்களின் மீது தற்போது காட்டத் தொடங்கிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. எப்போதும் ஜாலியாக இருப்பதை விடவும் இப்படி விறுவிறுப்பாக இருப்பது நிகழ்ச்சிக்கு எனர்ஜி ஊட்டி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வேற லெவல் தண்டனை
இசைவாணி இடம் ரூல்ஸ் பிரேக் பண்ணுன மாதிரி நிரூப்பிடமும் செய்து விடலாம் என்று நினைத்த அண்ணாச்சி முதல் சக போட்டியாளர்களையும் பனிஷ்மென்ட் என்கிற பெயரில் அந்நியனாக மாறி அனைவரையும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். ரூல்ஸ் என்று இவர் போடுவதை மதிக்கவில்லை என்றால் பனிஷ்மெண்ட் என்று இவர் கொடுக்கும் அலப்பறைகள் வேற லெவலில் இருந்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் விளையாட்டு, இது தான் தலைமை என்றும் இவருக்கு சப்போர்ட் கொடுத்தும் வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications