ராபர்ட் மாஸ்டர் சொன்னது எல்லாம் பொய்யா? ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்..இவர் தான் அவருடைய மகளாம்!?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு காரணம் தன் மகள் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கதை சொல்லி இருந்தார். ஆனால் அதைக் குறித்து தற்போது நெட்டிசன்கள் பல ஆதாரங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
தன்னுடைய மகளை கடைசியாக 7 வயதில் பார்த்ததாகவும், ஆனால் அவர் அப்போ தன்னை அங்கிள் என்று அழைத்ததாகவும் கூறி வருத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் ஒரு குழந்தையோடு இருக்கும் வீடியோவிற்கு வெளியிட்ட கேப்ஷன் தான் பலரையும் நெருட செய்திருக்கிறதாம்.

கதை சொல்லும் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வரும். ஆனால் இந்த ஆறாவது சீசனில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் கதை சொல்லும் டாஸ்க் அந்த அளவிற்கு இழுத்துக் கொண்டு இருக்க வில்லை. போட்டியாளர்களே சக போட்டியாளர்களின் கதைகளை நிராகரித்து விட்டனர். ஒரு சில போட்டியாளர்களின் கதைகள் மட்டும் தான் வெளியே தெரிந்தது. அந்த வகையில் ராபர்ட் மாஸ்டரின் கதையை கேட்டதும் அனைத்து ரசிகர்களுமே அவருக்கு அனுதாபங்களை வெளியிட்டு வந்தனர்.

ராபர்ட் மாஸ்டரின் கதை
போட்டியாளர்களில் மைனா நந்தினி மட்டும்தான் ராபர்ட் மாஸ்டரின் கதையை நிராகரித்து ரெட் பட்டனை அழுத்தி இருந்தார். மீதம் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ராபர்ட் மாஸ்டரின் கதையை கேட்டு பீல் பண்ணிக் கொண்டிருந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் போலியாவால் பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட் மாஸ்டர் தந்தையின் உதவியால் உடல்நிலை சரியாகி டான்ஸ் மாஸ்டராக மாறிய பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தான் படிக்கவில்லை என்ற காரணத்தினால் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், அப்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததாகவும், தற்போது அவருடைய மனைவி இரண்டாவது திருமணம் செய்து விட்டார். அந்த பெண் குழந்தை ஏழு வயதாக இருக்கும்போது கடை தெருவில் ஒருநாள் இவர் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

நெருடலான வார்த்தைகள்
கடை தெருவில் பார்க்கும் போது அவருடைய மனைவி குழந்தையிடம் பாய் அங்கிள் சொல்லு என்று சொன்னதாகவும் ,இவருடைய குழந்தையும் பாய் அங்கிள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டதாகவும் கூறியிருந்தார் .அதற்குப் பிறகு தன்னுடைய மகள் எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது. நான் இறந்த பிறகாவது என்னுடைய மகள் இடம் நான் தான் அப்பா என்று சொல்லுங்கள் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார். ஆஜானுபாகுவாக, கம்பீரமான முக அமைப்பில் இருக்கும் இவர் திடீரென்று குழந்தைத்தனமாக அழுவதை பார்த்த ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இருந்து வந்தது இவருக்கு ஆறுதல்களை பலரும் கூறி வந்தனர்.

இவர்தான் மகளாம்
இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவில் இது என்னுடைய மகள் என்று இவர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ஒரு குழந்தையோடு ராபர்ட் மாஸ்டர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோவாக அதில் பதிவாகி இருக்கிறது. அந்த குழந்தை ராபர்ட் மாஸ்டரின் குழந்தை தானா? அல்லது அவருடைய உறவினர்களின் குழந்தையா? என்று ஒரு சில ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே தான் வீட்டில் கடைசி பையன் தனக்கு முன்பு அண்ணன்கள் இருப்பதாக குறிப்பிட்டதால், அண்ணன் குழந்தையாக இருக்கலாம் அதனால் கூட என்னுடைய மகள் என்று குறிப்பிட்டு இருக்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுதான் அவருடைய சொந்த மகளாக இருக்குமோ ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ராபர்ட் மாஸ்டர் பொய் சொல்லி விட்டாரா? என்று இன்னொரு தரப்பினர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications