பிக் பாஸ் தமிழ்-6 ,மனுஷன் எப்படி அலர்ட்டா இருக்காருப்பா! ஜி பி முத்துவை பார்த்து வியந்த ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜிபி முத்து போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இந்த சீசன் தொடங்கியதுமே அதிகமான ரசிகர்கள் ஜி பி முத்துக்குதான் ஃபேன்ஸ் பேஜ்களை தொடங்கி இருக்கிறார்கள் .
ஜி.பி முத்துக்காக ஒரு சில ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் அவர் செய்த அட்ராசிட்டி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது.

இக்கட்டான சூழ்நிலை
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் அதிகமான ரசிகர்கள் வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கடந்த இரு சீசன்களின் ரசிகர்களின் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று பொதுவாக கருத்து நிலவி வருகிறது. இதனாலே ரசிகர்கள் அதிகமாக விரும்பும் ஒரு போட்டியாளரை கண்டிப்பாக களம் இறக்கி ஆக வேண்டும் என்று இக்கட்டான சூழ்நிலையில் பிக் பாஸ் இருக்கும்போது கடந்த சீசனில் இருந்து தப்பித்து போனவர் தான் ஜிபி முத்து ஆனால் இந்த சீசனில் இவர் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

கண்டெண்டுக்கு பஞ்சமே இல்லை
காமெடி நடிகர் வடிவேலுக்கு அடுத்தபடியாக சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களில் பலரையும் மிரட்டிக் கொண்டிருக்கும் ஜி பி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்டுக்கு பஞ்சமே இல்லாமல் கலை கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களுடைய கைவண்ணத்தில் சமூக வலைத்தளத்தை சிரிக்க வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் காலை வேளையில் ஜி பி முத்து சக போட்டியாளர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கே உரிய நக்கல் தனத்தோடு ஒரு குளத்தில் ஒரு பூ இருக்கும் அது என்ன பூ என்று போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.

ஜி பி முத்துவின் குறும்பு
சகப் போட்டியாளர்களும் குளத்தில் இருக்கும் பூ என்றால் அது தாமரைப்பூ என்று கூறுகிறார்கள். அது சரிதான் ஆனால் அதற்கு பக்கத்தில் இன்னொரு பூ இருக்கும் அது என்னது என்று கேள்வி எழுப்புகிறார். அது எப்படி இருக்கும் என்று ஒரு போட்டியாளர் கேட்கும் போது அது இதழ்கள் ஊச்சியாக இருக்கும் என்று கூறி அது சின்ன தாமரை பூ என்று அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதே வேளையில் அங்கே காலை வேளையில் ஒலிக்கும் குத்துப் பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. சிம்பு பட பாடல் ஆனா, "போட்டு தாக்கு" பாடல் ஒளிபரப்பாக தொடங்கியதும் முதல் ஆளாக டக்கென்று துள்ளி குதித்து ஓட தொடங்கி விடுகிறார்.

யாருக்கும் சளைக்காத டான்ஸ்
ஜிபி முத்துவின் ஓட்டத்தை பார்த்த சக போட்டியாளர்கள் ஒரு நிமிடம் மிரண்டு போய் பின்பு சுதாகரித்துக் கொண்டு அவர்களும் ஆட்டம் போட கிளம்பிவிட்டார். நீங்கள் எல்லாம் ப்ரொபஷனல் டான்சர் என்றால் நான் உங்களுக்கு கொஞ்சம் கூட குறைவில்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து போட்டியாளர்களுக்கும் ஈக்குவலாக மரண குத்து குத்து இருக்கிறார். போட்டு தாக்கு பாடலுக்கு ரட்சிதா உடன் இவர் போட்ட கலக்கலாக ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் தலைவரை அடிச்சுக்க யாராலும் முடியாது என்று டெம்ப்லேட் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications