பிக் பாஸ் 7: நிக்சனுக்கு ஆதரவாக அனன்யா சொன்ன எடுத்துக்காட்ட பாருங்க.. ஆனால் வெளுத்து விட்ட வினுஷா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வினுஷா தேவியை நிக்சன் உருவ கேலி செய்தது குறித்து வினுஷா நிக்சனிடம் பேசியதற்கு அதிருப்தி தெரிவித்த அனன்யா நிக்சன் செய்தது தவறு என்றாலும் இதையே மேலும் மேலும் பேசிக் கொண்டிருப்பது தவறு என்று வினுஷா தேவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அதிலும் வினுஷா தேவி இடம் நிக்சன் பேசியது குறித்து அனன்யா ஒரு எடுத்துக்காட்டு சொல்லி இருந்தார். அந்த எடுத்துக்காட்டை கேட்டு கோபமான வினுஷா தன்னுடைய கருத்தை பளார் என்று அறைந்தது போல எடுத்து வைக்க பதில் பேச முடியாமல் அனன்யா திணறி இருக்கிறார்.

வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து நிக்சன் பேசிய வார்த்தையை போலவே வெளியேயும் பலர் என்னை இதே வார்த்தைகளை சொல்லி பேசுகிறார்கள் என்று வேதனையோடு இருந்த வினுஷாவிற்கு ஆதரவு சொல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் வினுஷாவின் மனது புண்படும்படி பேசியது சரிதான் என்கிற தோரனையில் அனன்யா பேசியது மிகவும் தவறு என்று பலர் அனன்யாவை திட்டி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக பலருக்கும் பரீட்சயமான வினுஷா பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். ஆரம்பமான ஒரு சில வாரங்களிலேயே இவர் எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது உள்ளே அதிகமாக வேலை செய்து கொண்டு இருந்தார்.
அவர் முதல் வாரத்திலேயே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டதால் அவருக்கு கிச்சனில் தான் அதிகமாக வேலை இருந்தது. அந்த நிலையில்தான் அவரிடம் தம்பி என்று பாசமாக பேசி வந்த நிக்சன் ஐசு உடன் பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு பிடித்த மாதிரி பொண்ணுங்க எப்படி இருக்கணும் என்றால் என்று ஒரு எடுத்துக்காட்டு சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது வினுஷா எல்லாம் என்னுடைய டைப்பே கிடையாது. அவ வேலைக்காரி மாதிரி இருக்கா. அவளுக்கு எது எது எப்படி இருக்கணுமோ அது அது உடம்புல அப்படி இல்ல, முகம் குட்டியா இருக்கு.... கண்ணு அழகா இருக்கு, டிரஸ் போட்டா நல்லா இருக்கா என்று வர்ணித்திருக்கிறார். அதோடு பூர்ணிமா அக்காவுக்கு எல்லாம் பக்காவா இருக்கு என்றும் சொல்லியிருக்கிறார். இது அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்தது.
ஒரு அக்கா என்று சொல்லிவிட்டு இப்படித்தான் அக்காவை வர்ணிப்பியா என்று பல திட்டி வந்தனர். இந்த நிலையில் வினுஷா இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இது பத்தி தெரிஞ்சு தன்னுடைய கோபத்தையும் பல பேட்டிகளில் வெளிகாட்டி இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமானோர் நிக்சன் டார்கெட் செய்திருந்தனர்.
இப்படியான நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் வினுஷா இது குறித்து தன்னிடம் ஃபோனில் மன்னிப்பு கேட்ட நிக்சனிடம் நீ பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து 70 கேமரா முன்பு மன்னிப்பு கேளு என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில்தான் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் அனன்யா வந்ததாக வந்து வினுஷாவிடம் சிக்கி இருக்கிறார்.

தனியாக இருந்த வினுஷாவிடம் பெண்கள் எல்லாம் ஒரு பையன் 6 பேக் வச்சிட்டு இருந்தா நல்லா இருக்கணும்னு நினைக்கிறது இல்லையா? அப்படித்தான் நிக்சனும் பேசிட்டான். இது நார்மல் தானே? என்று நிக்சனுக்கு முட்டுக் கொடுக்க இதற்கு வினுஷா அப்படி ஒரு பெண் பேசினாலும் பையன் பேசினாலும் தப்பு தப்பு தான். அந்த நினைப்பே தப்புதான் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த விவாதத்தை பார்த்து அனன்யாவை ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிக்சனிடமும் இதுகுறித்து பேசி இருந்தபோது நிக்சன் நான் பேசியதை வெளியே தப்பா பரப்பிருக்கிறாங்க... அதனால மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல,
அதனால் கடுப்பான வினுஷா வெளியே தப்பா காட்டப்பட்டதால் மன்னிப்பு கேட்கிறேன் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உனக்கு உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் அதை ஏற்றுக் கொள்வேன் என்று பேசி இருக்கிறார். இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை கமெண்டில் சொல்லிட்டு போங்க.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications