பிக் பாஸ்க்குள் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது.. தினேஷ் பற்றி தெரியுமா? பகீர் ரகசியத்தை உடைத்த அர்ச்சனா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த சீசன் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற அர்ச்சனா பேட்டிகளில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் யார் என்பது பற்றி அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரி ஆகப்போன தினேஷ் மற்றும் அர்ச்சனா இருவருக்கும் இடையே ஒரு நல்ல பாண்டிங் இருந்தது. ஆனால் நிகழ்ச்சி முடிவுக்கு முன்பு ஒரு சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அர்ச்சனா தினேஷ் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சனா முதல் முறையாக இன்று பேட்டி கொடுத்திருக்கிறார். சில யூடியூப் சேனல்களுக்கும் விஜய் டிவி சேனலுக்கும் அர்ச்சனா பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அர்ச்சனாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் யார் என்று கேட்ட கேள்விக்கு அது பிரதீப் தான் என்று கூறியிருக்கிறார். நான் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு முன்பே ஒரு மாதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து இருந்தேன். அதில் பிரதீப்புடைய விளையாட்டு எனக்கு ஏற்கனவே பிடிக்கும். அந்த வகையில் நான் உள்ளே போன பிறகு கூட ஒரு சில நேரங்களில் பிரதீப் என்னோடு சண்டையிட்டு இருந்தாலும் அதற்கு பிறகு என்னிடம் நன்றாக தான் பழகி வந்தார்.
அந்த ஒரு வாரம் அவர் விளையாட்டு வேற லெவலில் இருந்தது. பிறகு கூட என்னிடம் எப்படி எல்லாம் விளையாட வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அவர் வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதே நேரத்தில் பிரதீப்புக்கு அடுத்ததாக இன்னொரு போட்டியாளர் என்று சொன்னால் அது தினேஷ் தான். அவர் யாரிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசுவார். முகத்துக்கு நேராகவே பேசி விடுவார்.
அதுவும் ஒரு வார்த்தையால் அவரை தாக்கினால் அவர் உடனே அதற்கு பதிலடி கொடுத்து பேச முடியாமல் பண்ணி விடுவார். அதுபோல தினேஷுக்கு இன்னும் நிறைய திறமை இருக்கிறது. தினேஷ் ப்ரோ ஒரு முறை பிக் பாஸ் வீட்டிற்குள் கடிகாரம் டாஸ்க் நடைபெற்றது. அப்போது அவர் ஒரு கடிகாரம் செய்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். அதனால் தினேஷ் ப்ரோ நிஜத்தில் பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் திறமையானவர்.
அவருக்கு எந்த ஒரு விஷயத்தையும் உற்று நோக்கும் திறமை இருக்கிறது என்று தினேஷ் பற்றி அர்ச்சனா பெருமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோ வெளியான அடுத்த சில நொடிகளிலேயே தன்னை பற்றி பெருமையாக பேசிய அர்ச்சனாவிற்கு நன்றி தெரிவித்து தினேஷ் அதில் கமெண்ட் கொடுத்து இருந்தார். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் விளையாட்டு வெளியே பார்க்கும் மக்களுக்கு வெறுப்பை கொடுத்து இருக்கும்.
ஆனால் உள்ளே இருக்கும் சூழ்நிலையால் தான் போட்டியாளர்கள் அந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஆனால் வெளியே அவர்களுடைய கேரக்டர் அந்த மாதிரி இருக்காது என்றும் அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னிடம் போனில் பேசிய போட்டியாளர்களிடம் நானும் பேசினேன் அதுபோல எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு இனி அதை நோக்கி நான் பயணிக்க போகிறேன் அது பற்றி சீக்கிரமாக மக்களிடம் தெரிவிப்பேன் என்றும் அர்ச்சனா பேசியிருந்தார்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications