நிக்சன் செயலை கிழித்த வனிதா.. ஆனால் வெளியே வந்ததும் செய்த செயலை பாருங்க.. சிக்கிய புகைப்படங்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நிக்சன் குறித்து நடிகை வனிதா தன்னுடைய ரிவியூவில் அடிக்கடி திட்டி தீர்த்து வந்தார்.
ஆனால் வெளியே வந்ததும் நிக்சன் வனிதாவின் மகளான ஜோவிகாவோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அதையும் வனிதா தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களிலேயே பகிர்ந்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமாகிக் கொண்டிருக்கிறதோ அது போலவே அந்த நிகழ்ச்சியை பல பிரபலங்களும் ரிவ்யூ செய்து பிரபலங்களாகி வருகிறார்கள். அந்த வரிசையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளராகவும் நடிகையாகவும் இருக்கும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியை சில சீசன்களாக ரிவ்யூ செய்து வருகிறார்.
இதற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அந்த வகையில் கடந்த வாரத்தில் நிக்சன் பூர்ணிமாவிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து வனிதா கழுவி ஊத்தி இருந்தார். அக்கா என்று சொல்லிவிட்டு நிக்சன் பூர்ணிமாவோடு கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது,
ஏற்கனவே ஐசுவோடு இப்படித்தான் நெருக்கமாக தடவிக்கொண்டே இருந்தான் இப்போது பூர்ணிமாவோடு நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது முகம் சுளிக்க வைக்கிறது. நிக்சன் பிக் பாஸ்க்கு வந்த வேலையை மறந்து விட்டு முழு நேரமும் ஜாலி பண்ணுவதற்காகவே பிக் பாஸ் வீட்டிற்க்குள் நிக்சன் இருக்கிறார் என்று வனிதா திட்டி தீர்த்து இருந்தார்.
அதோடு மாயா மற்றும் பூர்ணிமாவை ஆரம்பத்தில் அதிகமாக சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருந்த வனிதா ஒரு சில வாரங்களாக அவர்கள் நடந்து கொள்வதும் தனக்கு வருத்தம் கொடுக்கும் வகையில் தான் இருக்கிறது, தங்களுக்கு தேவைக்கு அடுத்தவர்களை யூஸ் பண்ணுகிறார்கள் என்றெல்லாம் அந்த வீடியோவில் வனிதா பேசியிருந்தார்.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிக்சன் எலிமினேஷனில் வெளியே வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து நேற்று நிக்சன், ஜோவிகா மற்றும் சரவண விக்ரம் மூவரும் சந்தித்து புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா பகிர்ந்து இருக்கையில் அதிகமான ரசிகர்கள் அதை கலாய்த்து வருகிறார்கள்.

போன வாரம் வரைக்கும் நிக்சனை அந்த கிழிகிழிச்சிட்டு இந்த வாரம் நிக்சன் போட்டோவையே நீங்க ஷேர் பண்ணி இருக்கீங்களே என்று கேள்வி குவிக்கிறது. அதே நேரத்தில் வனிதா தன்னுடைய ரிவ்யூவில் பேசியது எல்லாம் அப்போ பொய்யா? வெளியே வந்தது நிக்சன் செய்தது தவறு என்று வனிதா ஏன் அறிவுரை சொல்ல மறந்து இருக்கிறார்கள் என்றும் பலர் பற்ற வைக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications