பிக் பாஸ்க்கு பிறகு விசித்ராவுக்கு செம வரவேற்பு.. குவிந்த நடிகைகள்.. ஆனால் என்ன சொல்லி இருக்காங்க பாருங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று 97வது நாளில் எலிமினேஷன் ஆகி விசித்திரா வெளியே வந்திருக்கிறார். அவருக்கு அவருடைய குடும்பத்தினர் பிரம்மாண்டமாக வரவேற்பு வைத்திருக்கின்றனர். அப்போது அவரை பார்ப்பதற்காக பல நடிகைகள் அவரை வரவேற்க வந்திருக்கின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்திராவிற்கு அதிகமான ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வெளியே வந்த விசித்திராவிற்கு வாழ்த்துக்கள் கூறுவதற்காக நடிகைகள் பலர் அவருடைய வீட்டிற்கு போய் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிலும் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அசீம் முதல் கொண்டு சில நடிகைகள் விசித்திராவை வரவேற்று இருக்கும் நிலையில் விசித்ரா இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகாமல் போனதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களையும் தெரிவித்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகையாக விசித்ராவை பலருக்கும் தெரிந்தவர் தான். ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களான பல திரைப்படங்களில் விசித்திரா கவுண்டமணி மற்றும் செந்தில் உடன் சேர்ந்து நடித்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்த விசித்திரா பிறகு திரைப்படங்களிலிருந்து காணாமல் போய் இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த விசித்திரா பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விசித்திரா மூன்றாவது இடத்தில் வெற்றியும் பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விசித்ராவின் மீது இருந்த பார்வை ரசிகர்களின் மத்தியில் மாறி இருந்தது.
அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்திராவிற்கு வாய்ப்பு கிடைத்ததும் இவருடைய கேரக்டர் குறித்து ரசிகர்கள் ரசிக்க தொடங்கிவிட்டனர். அதிலும் முதல் வாரத்திலேயே விசித்திராவிக்கும் ஜோவிகாவிற்கும் படிப்பு விஷயத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் பெரிய அளவில் விசித்திராவிற்கு மக்களின் மத்தியில் ஆதரவை வாங்கி கொடுத்தது.
அதைத் தொடர்ந்து விசித்திரா பிரதீப்க்கு ஆதரவு கொடுத்ததும் பலராலும் இவர் பாராட்டப்பட்டார். தொடர்ச்சியாக விசித்திராவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமான வரவேற்பு மக்களின் மத்தியில் இருந்தது அதனாலேயே தொடர்ச்சியாக இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் பல நாமினேஷனில் இடம் பிடித்தும் விசித்ரா தாக்கு பிடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் கூட அன் அபிஷியல் ஓட்டிங்கில் முன்னணி இடத்தில் இருந்த விசித்திரா பிறகு எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார். டைட்டில் வின்னராக விசித்திரா வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஆனாலும் வெளியே வந்த விசித்திராவிற்கு அவருடைய கணவர் மற்றும் நண்பர்கள் குடும்பத்தினர்கள் சேர்ந்து பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் விசித்திராவை வரவேற்பதற்காக நடிகை அம்மு ராமச்சந்திரன், ரித்விகா போன்ற நடிகைகள் விசித்திராவின் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர்.
அவர்களோடு சேர்ந்து விசித்திரா எடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அம்மு ராமச்சந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து பிக் பாஸ் 7 லயன் லேடிக்கு அன்பான வரவேற்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார்... அதைத் தொடர்ந்து பலரும் விசித்திராவை "லயன் லேடி" என்று அழைத்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications