பிக் பாஸுக்குள் மீண்டும் வந்த வினுஷா.. நிக்சன் பற்றி சொன்ன பகீர்.. வெளியே இது கூட நடந்திருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் மீண்டும் வினுஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றிலிருந்து ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர்.அதில் வினுஷாவிடம் தினேஷ் உன்னுடைய தம்பி நிக்சன் உனக்கு போன் பண்ணுனா என்று கேட்க அதற்கு வினுஷா சில உண்மைகளை உடைத்திருக்கிறார்.
இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே நிக்சன் வினுஷாவை உருவ கேலி செய்திருந்த நிலையில் அது குறித்து வினுஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தன்னுடைய கோபத்தை இணையத்தில் காட்டி இருந்தார்.இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்திருந்த வினுஷா, நிக்சன் வீட்டுக்குள் வரும்போது தன்னை பற்றி பேசியதற்கு விளக்கம் கொடுப்பார் என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு சில விஷயங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் ஒன்றுதான் வினுஷாவின் உடல் அமைப்பு குறித்து நிக்சன் வர்ணித்து பேசி இருந்ததும். இது பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது. வினுஷாவின் முகம் குட்டியாக இருக்கிறது.

அவர் எனக்கு பிடித்த மாதிரி இல்லை.. எங்கெங்கு என்னென்ன இருக்கணுமோ அதெல்லாம் அப்படி எப்படி இல்லை என்று நிக்சன் பேசியிருந்தார். அந்த நேரத்தில் வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் தான் இருந்தார். ஆனாலும் இணையத்தில் இது குறித்து அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அக்கா என்று சொல்லிவிட்டு ஒருவர் இப்படி எல்லாம் தரக்குறைவாக பேசலாமா? என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாரமே வினுஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனாகி வெளியே வந்திருந்தார். வந்ததும் இது பற்றி பேட்டிகளில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார். நான் நிக்சனை தம்பியாக நினைத்திருந்தேன். ஆனால் நிக்சன் இப்படி எல்லாம் என்னை பேசுவான் என்று நான் நினைக்கவே இல்லை என்று தன்னுடைய கோபத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் நிக்சனும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷனாகி வெளியே சென்று இருக்கிறார். இப்படியான நிலையில் தான் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர். அதில் தற்போது வெளியான ப்ரோமோவில் வினுஷா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார் அவரிடம் தினேஷ் உனக்கு தம்பி போன் பண்ணி பேசினானா என்று விசாரிக்கிறார்.
அதற்கு வினுஷா ஆமா பேசினான். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நீ 70 கேமரா முன்னாடி தானே என்னை பத்தி அப்படி பேசின, அதேபோல மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள அதே 70 கேமரா முன்னாடி வந்து பேசு என்று சொல்லியிருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி நிக்சன் வீட்டிற்குள் வரும்போது அடுத்த பூகம்பம் வெடிக்க இருக்கிறது.
வழக்கம் போல நிக்சன் இந்த முறையும் அனைவர் முன்பும் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறாரா? அல்லது தான் சொன்னது சரிதான் தவறே இல்லை என்று மீண்டும் வாதிட போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். இது பற்றி உங்க கருத்துக்களை கமெண்டில் தட்டி விடுங்க.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications