ரச்சிதா முடிவுக்கு காரணமே இதுதான்.. அவங்களோட மனநிலை மாற்றம்! வெளிப்படையாக பேசிய தினேஷ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தினேஷ் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தன்னுடைய மனைவியான ரச்சிதாவோடு மீண்டும் வாழ்க்கையில் சேர்வதற்காக தான் என்று கூறியிருந்தார். காரணம் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினேஷ் இருக்கும்போது தொடர்ச்சியாக அவருக்கு எதிராகவே ரச்சிதா தன்னுடைய மனநிலையை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துக் இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தினேஷிடம் பேட்டி ஒன்றில் இப்போது நீங்கள் ரச்சிதாவோடு சேர்வது குறித்து என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு தெளிவான விளக்கம் ஒன்று கொடுத்திருக்கிறார். அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரை தம்பதிகளாக இருந்த ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் ஆரம்பத்தில் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்தனர். பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே சில வருடங்களாக இவர்கள் பிரிந்திருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதற்காக கோர்ட்டில் அப்ளை செய்திருக்கின்றனர்.
அந்த வழக்கு போய்க் கொண்டிருக்கிறது இந்த நிலையில் தினேஷ் ரச்சிதாவோடு தான் எப்படியும் சேர்ந்து விடுவேன் என்று பேட்டிகளில் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். அதுபோல ரச்சிதாவோடு சேர்வதற்காக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இந்த சீசன் டைட்டில் ஜெயித்து அதை ரச்சிதாவிடம் கொடுப்பேன் என்று தினேஷ் கூறியிருந்தார். ஆனால் அவர் ஆசைப்பட்டபடி டைட்டிலும் ஜெயிக்கவில்லை, ரச்சிதாவோடும் சேரவில்லை.
இது குறித்து பேட்டி ஒன்றில் தினேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்போது எப்படியாவது ஒரு தீப்பொறி பறக்கும் அதை வைத்து நான் ரச்சிதாவோடு சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கிருந்து வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது இங்கே எதுவுமே அப்படி பறக்கவில்லை என்று, அவருடைய மன நிலையில் அவர் இப்போதும் ஸ்ட்ராங்காக இருக்கிறார். அவர் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
எந்த இடத்திலும் அவர் மனம் இறங்கவே இல்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாகவும் அதே நேரத்தில் தனக்குன்னு ஒரு புதிய வழியையும் அவர் தேர்ந்தெடுத்து விட்டார். அதற்கு மேல் நான் இனி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். என்னதான் நமக்கு இன்னொருத்தர் மேல பாசம் இருந்தாலும் அதை ஒரு அளவுக்கு தான் காட்ட முடியும். ஆனால் அவர் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் நாம் கட்டாயப்படுத்த கூடாது.
அதனால் நான் இப்போது அடுத்து என்ன நடக்கணுமோ அதுபடி நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இனி யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று இருக்கிறேன். இனி அவருடைய வாழ்க்கையை அவரே முடிவு செய்யட்டும். நான் இனி என்ன செய்யணுமோ அதன்படி என்னுடைய வாழ்க்கை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதை இனி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நான் முடிவு எடுத்து இருக்கிறேன். அதுபோல என்னுடைய பெற்றோர்களின் நிம்மதியும் எனக்கு முக்கியம். அதற்காகவும் இனி என்னுடைய பயணம் போய்க் கொண்டிருக்கும் என்று தினேஷ் கூறியிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் இந்த முடிவு தான் சரி என்று பாராட்டி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications