பிக் பாஸில் பரபரப்பு.. திடீரென வெளியே அனுப்பப்பட்ட அர்ச்சனா.. விஷ்ணுவுக்கு முத்தம் கொடுத்த மாயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமான தினேஷ் மற்றும் அர்ச்சனா இதுவரைக்கும் ஒரே அணியாக இருந்த நிலையில் நேற்று அர்ச்சனாவை டிக்கெட் டு பினாலே டாஸ்கிலிருந்து தினேஷ் வெளியேற்றி இருக்கிறார்.

இதனால் அர்ச்சனா மற்றும் தினேஷிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் விஷ்ணுவுக்கு மாயா முத்தம் கொடுத்து திடீர் பாசம் தொடங்கி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

bigg boss 7 Dinesh kicked Archana out of the Ticket to Finale task and Maya who kissed Vishnu

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. இதுவரைக்கும் உள்ள சீசன்களில் ஆரம்பத்திலேயே இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று ரசிகர்களால் உறுதியாக கூற முடியும். ஆனால் இப்பொழுது உள்ள இந்த ஏழாவது சீசனில் யாரையும் அப்படி குறிப்பிட்டு சொல்ல முடிவதில்லை.

காரணம் ஒரு வாரம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் போட்டியாளர்கள் மறுவாரமே ஏதாவது பிரச்சனையை செய்து இவரா அவர் என்று சொல்லும் வகையில் தான் இருக்கிறார்கள். இப்படியாக இருக்கும் நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமான அர்ச்சனா தினேஷ் இருவருமே ஒரே கூட்டணியாகவே இத்தனை நாட்களாக இருந்து வந்தனர்.

கடந்த வாரத்தில் அர்ச்சனா மற்றும் நிக்‌சனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட போது கூட அர்ச்சனாக்கு சாதகமாகத்தான் தினேஷ் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த வார சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் கமல்ஹாசன் அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு நான்கு பேருக்கும் கொடுத்த டோசால் இதுவரைக்கும் தாங்கள் விளையாடி வந்த விதம் தவறு என்று நினைத்து விட்டார்கள் போல.

அதனால் தான் நேற்றைய எபிசோடில் மாற்றம் காட்டி இருக்கிறார்கள். அதாவது நேற்று ஓப்பன் நாமினேஷன் நடைபெற்ற போது அர்ச்சனா தினேஷை நாமினேஷன் செய்திருந்தார். அது அனைவருக்கும் வியப்பை கொடுத்து இருந்தது. அதுபோல நேற்று டிக்கெட் டு பினாலே நடைபெற்றது. அப்போது தினேஷ் அர்ச்சனாவிற்கு இந்த டாஸ்க் எவ்வளவு முக்கியம் என்பது தெரியவில்லை. அதனால் அவர் இந்த டாஸ்கிலிருந்து வெளியேறலாம் என்று அவருக்கு ஓட்டு போட்டு இருந்தார்.

இது அர்ச்சனாவை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதனால் விசித்திராவிடம் தினேஷ் இப்படி பண்ணுவார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கல. இத்தனை நாட்களாக நான் என்னுடைய அண்ணனாக நினைத்து இருந்தேன். ஆனால் தினேஷ் என்னையே இந்த டாஸ்கிலிருந்து வெளியே அனுப்புவதற்கு முயற்சி செய்கிறார் என்று பீல் பண்ணி பேசி இருந்தார்.

அதுபோல டிக்கெட் 2 பினாலே டாஸ்க்குகாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது மாயா திடீரென்று விஷ்ணு கீழே குனியும்போது அவருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். அதை எதிர்பாக்காத விஷ்ணு என்னடா நடக்குது இங்க என்று நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்க அங்கிருக்கும் அனைவரும் இதை சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

bigg boss 7 Dinesh kicked Archana out of the Ticket to Finale task and Maya who kissed Vishnu

இவர்களுடைய புது கூட்டணி ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. காரணம் போன வாரம் முழுக்க மாயா மற்றும் பூர்ணிமா அணிக்கு எதிராக தினேஷ் அணியோடு விஷ்ணு பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் விதிமீறல்கள் அளவுக்கு அதிகமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள். இத்தனை கேமரா முன்னாடி எல்லோரும் சுற்றி இருக்கும்போது விஷ்ணுவுக்கு மாயா முத்தம் கொடுத்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+