பிக் பாஸ்க்குள் விசித்திரா “அதை” சொல்லி ஏமாத்திட்டாங்க! வெளியே வந்து தெரிஞ்சுடுச்சு.. மணி ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருக்கும் போது விசித்திரா எங்களிடம் ஒரு வார்த்தையை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் அது வெளியே வந்த பிறகு தான் விசித்ரா சொன்னது பொய் என்று எங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ரன்னரான மணி சந்திரா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் தான் கடந்த ஏழாவது சீசனில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து மாறி மாறி தங்களுடைய வன்மத்தை கக்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் பிக் பாஸ்க்குள்ள என்ன நடந்தது என்பதை பற்றி மணி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss 7 Mani Chandra about Vichitra

அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வாடிக்கைதான். அந்த மாதிரி தான் அண்டகாகசம் என்ற நிகழ்ச்சியில் தினேஷ் விசித்திரா, விஷ்ணு, மணி, அக்ஷயா, அனன்யா, ரவீனா போன்றோர் கலந்து கொண்டிருந்தபோது அங்கு விசித்திரா சண்டையிட்டு வெளியே போய் விட்டதாக ஒரு செய்தி கடந்த வாரத்தில் பரவி வந்தது.

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை பற்றி தினேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், அந்த நிகழ்ச்சியில் விசித்ராவின் அணியில் தினேஷும், விஷ்ணுவும் சேர்ந்து விளையாட வேண்டும் என்று விசித்திரா கேட்டதாகவும் அதற்கு நான் மறுப்பு சொல்லிவிட்டதால் தான் விசித்திரா கோவப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியே போனார். மத்தபடி நான் அவரை எந்த கிண்டலும் பண்ணவில்லை என்று அந்த வீடியோவில் தினேஷ் பேசி இருந்தார்.

அதைத் தொடர்ந்து மணி, விசித்ராவை பற்றி அதே பேட்டியில் பேசியிருக்கிறார். அதாவது விசித்ரா மேடம் பிக்பாஸுக்குள் இருக்கும்போது பல இடங்களில் எனக்கு இந்த விளையாட்டு புரிஞ்சுக்கவே முடியல, எப்படி விளையாடுவதுனு தெரியல என்று புலம்பிக்கொண்டே இருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகுதான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செஞ்சு இருக்கிறார் என்று ரகசியமே எனக்கு தெரிய வந்தது.

நான் வெளியே வந்து அதை கேட்டு அதிர்ச்சியாகிட்டேன். ஏன்னா பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு முறையும் அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது, எப்படி எல்லாம் யாரிடம் பேச வேண்டும் என்று கூட எனக்கு தெரியலையே என்று விசித்திரா என்னிடமே சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் பிக் பாஸ் ரிவியூ செய்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறார். ஆனால் பிக் பாஸுக்குள் அதை சொல்லாமல் ஏமாற்றிவிட்டார்.

மற்ற போட்டியாளர்களை பார்த்து கூட இவர் பிக் பாஸை கரைச்சி குடிச்சிட்டு வந்திருக்கிறார், பிக் பாஸ் பற்றி புக் எழுதிவிட்டு வந்திருக்கிறார் என்றெல்லாம் விசித்திரா சொன்னாங்க. ஆனால் அவர்தான் எங்களை எல்லாரையும் விட அதிகமாக பிக் பாஸை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் எந்த இடத்தில் எப்படி பேசினால் மக்களுடைய கவனம் நம்ம மேல வரும் என்பதை தெரிந்து கொண்டுதான் அவர் காய் நகர்த்திருக்கிறார் என்று எங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது என்று அந்த பேட்டியில் மணி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+