எங்க சொருகுவீங்க? வேட்டையாடு விளையாடு மோடில் கலக்கிய கமல்.. ஆனால் கடைசியில் இப்படி செய்து விட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் கமல்ஹாசன் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தற்போது வெளியான பிரமோவில் நிக்சனுக்கு மஞ்சள் கார்டு கொடுத்து ஸ்ட்ரைக் கொடுத்து இருக்கிறார்.
அடுத்தவர்களை மிரட்டி பேசிய பிரதீப்புக்கு எதிராக உடனே ரெட் கார்டு கொடுத்த கமல்ஹாசன் பிரதீப்பை போலவே பேசிய நிக்சனுக்கு மஞ்சள் அட்டை கொடுத்து இருப்பது விமர்சனம் ஆகி வருகிறது. அது குறித்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுகளும், சர்ச்சைகளும் இருப்பது தான். அதிலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்து தொடங்கிய பிரச்சனை இப்போது வரைக்கும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களை விடவும் இந்த சீசனில் போட்டியாளர்கள் அதிகமாக சண்டைகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.
காரணம் சண்டைகள் அதிகமாக போடும் போட்டியாளர்கள் தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகுவார்கள் என்பதை கடந்த சீசனில் புரிந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டு வருகின்றனர். அதிலும் கடந்த வாரத்தில் நிக்சன் அர்ச்சனாவிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது.
ஏற்கனவே இதுபோல அடாவடியாக பேசி அடுத்தவர்களை அச்சுறுத்தி மிரட்டிய விஜய் வர்மாவிற்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக மஞ்சள் அட்டை கொடுத்து ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் நிச்சனுக்கு எல்லா மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அர்ச்சனாவை நிக்சன் நாயே, சீ, போடி கருமம், சொருகிடுவேன் என்றெல்லாம் பேசிய நிக்சனுக்கு ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப விட வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் கண்ணு வேண்டும் என்று கேட்டியாமே என் கண் வேணுமா என்று கண்ணை விரித்து காட்டியது போலவே இன்று நிக்சனிடம் சொருகிடுவேன் என்று சொன்னிங்களே எங்க சொருகுவிங்க? இங்கேயா? இங்கேயா?என்று தன்னுடைய கண், வயிறு நெஞ்சு பகுதி என பல இடத்தில் கை வைத்து கேட்டிருக்கிறார்.
இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நிக்சன் பேச்சுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலும் இன்று நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்காமல் மஞ்சள் அட்டை கொடுத்து இருப்பது பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications