பிக் பாஸ் 7: wild card கோவில்பட்டி அன்னபாரதி யார் தெரியுமா..? இப்படித்தான் வாய்ப்பு கிடைத்ததா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அக்டோபர் 29ஆம் தேதி 5 போட்டிகள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமாகி இருக்கின்றனர்.
அதில் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதியும் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அவர் யார் எப்படி அவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டாளராக ஐந்து பேர் அறிமுகமாக போகிறார்கள் என்று கடந்த வாரமே கமல்ஹாசன் ப்ரோமோவில் கூறியிருந்த நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 29ஆம் தேதிக்கான எபிசோடில் ஐந்து போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர்.
அதில் ஒரு நபர் தான் அன்னபாரதி. இவர் மிகப்பெரிய நகைச்சுவை நடிகையாகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே படிப்பு விளையாட்டுகளில் அதிகமான ஆர்வம் இருந்ததாம். அதோடு பேச்சு போட்டி, எழுத்துப்போட்டி, கற்றல் போட்டி, பாட்டு போட்டி, நினைவாற்றல் போட்டி என பல போட்டிகளில் இவர் ஸ்கூல் படிக்கும்போது இருந்தே கலந்து கொண்டு பல பரிசுகளையும் வாங்கி இருக்கிறார்.
இதனால் தான் இவருக்கு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் எம்எஸ்சி, எம்பில், எலக்ட்ரானிக்கல் படித்திருக்கிறாராம். முதலில் ஹெச்டிஎஃப்சி பேங்கில் ஒரு வருடமாக வேலை பார்த்து இருக்கிறார். அதற்கு பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் சிசிஏவாக வேலை பார்த்து இருந்தாராம். அதைத் தொடர்ந்து மக்கள் டிவியில் உரிமைக்குரல் என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருக்கிறார்.
அதை தொடர்ந்து கே டிவியில் மங்கையர் மன்றம் என்று பல பட்டிமன்றங்கள் போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் அதிகமாக மதுரை முத்துவுடன் இணைந்து பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் துபாய், சிங்கப்பூர், மலேசியா, குவைத், பக்ரைத், மஸ்கட் போன்ற பல வெளிநாடுகளுக்கும் சென்று தன்னுடைய நகைச்சுவையான பேச்சு மூலமாக பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார்.
அதோடு சன் டிவியில் காமெடி ஜங்ஷன், சண்டே கலாட்டா, லொள்ளு சபா, ஆதித்யா டிவி என்று பல நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று இருக்கிறார். இதைவிட எல்லாம் இவருக்கு பெரிய அளவில் சிறப்பை கொடுத்தது என்றால் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண் வர்ணனையாளராக அன்னபாரதி பங்கேற்று இருந்தது தான். அதனாலையே இவரை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில் இந்த சீசனில் இவருடைய விளையாட்டு எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications