பிக் பாஸுக்கு இன்வாய்ஸ் அனுப்ப போறேன்! இதுக்கு பிரதீப்பை உள்ளேயே வச்சிருக்கலாம்.. வனிதா பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து கொண்டிருக்கும் வனிதா இன்று தன்னுடைய மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் போய் இருக்கும் நிலையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இன்வாய்ஸ் அனுப்ப போறேன் என்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.

அதற்குக் காரணம் சில தினங்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் போய் இருக்கும் போட்டியாளர்களை வனிதா தான் ட்ரைனிங் கொடுத்து அனுப்பி இருக்கிறார் என்று பலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். அதனால் கோபமான வனிதா நான் பிக் பாஸ்க்கு இன்வாய்ஸ் அனுப்ப போறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா செய்வதை பார்த்துக்கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. இதற்கு பிரதீப்பையே உள்ளே வைத்து இருக்கலாம் என்று ஜாடை மாடையாக வனிதா சொல்லி இருக்கும் நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Bigg Boss 7 Vanitha that she is going to send an invoice to Bigg Boss

எப்போடா தொடங்கும் என்று இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது எப்படா முடியும் என்று பல நாட்களாக ரசிகர்கள் கதறி கொண்டிருக்கும் நிலையில் ஒருவழியாக வரும் ஞாயிற்றுக்கிழமையோடு இந்த சீசன் முடிவடையை இருக்கிறது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தாலும் அதில் அவர் இதை செய்திருக்கலாம் அதை பேசியிருக்கலாம்... என்று இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில போட்டியாளர்கள் கூட ரிவ்யூவராக மாறி கமலுக்கு அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை வனிதா. இவர் ஏற்கனவே நடிகையாக பலருக்கும் தெரிந்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் ரசிகர்களுக்கும் பரீட்சைமானவர்.. இப்போது தொடர்ச்சியாக பல சீசன்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அவருடைய மகள் போட்டியாளராக கலந்து கொண்டதும் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய மகள் மற்றும் அவர் சார்ந்திருக்கும் மாயா குரூப்புக்கு அதிகமாக சப்போர்ட் செய்து கொடுத்திருக்கிறார்.

இதனாலையே ரசிகர்கள் இணையத்தில் அவரை கலாய்த்து அவருக்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்து வருவதையும் பார்க்க முடியும். அதே நேரத்தில் மாயாவுக்கு எதிராக இருக்கும் அர்ச்சனாவை திட்டி வருவதால் அதற்கு ஆதரவு சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இருவேறு கருத்து வனிதாவின் ரிவியூவிற்கு இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய ரிவியூவில் தன்னுடைய மகள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் சில தினங்களாக வனிதாவை பற்றி பல மீம்ஸ்கள் குவிந்து வருகிறது. அதாவது வனிதா தான் பிக் பாஸ்க்கு போறவங்களுக்கு கோச்சிங் கொடுத்து அனுப்புகிறார், என்று பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த நிக்சன், விக்ரம், அக்ஷயா போன்றவருக்கு விருந்து வைத்து உபசரித்ததை அவர்களே வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் வெளியிட்டு இருந்தனர்.

இப்போது மீண்டும் வீட்டிற்குள்ளே போன இவர்கள் மாய குரூப்போடு சேர்ந்து கொண்டு அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் இது வனிதாவின் ட்ரைனிங், வனிதா தான் ஹெட் மாஸ்டர் என்றெல்லாம் கலாய்த்து கொண்டிருக்க இன்று தன்னுடைய ரிவியூவில் வனிதா இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதாவது நான் எல்லாருக்கும் கிளாஸ் எடுத்து அனுப்பிக்கிட்டு இருக்கேன்னா இனி பிக் பாஸ்க்கு நான் ஒரு இன்வாய்ஸ் அனுப்ப போறேன். உங்க நிகழ்ச்சிக்கு வர போட்டியாளர்களுக்கு எல்லாம் நான்தான் ட்ரைனிங் குடுக்கறேன் அதனால எனக்கு சம்பளம் கொடுங்கனு நான் அதுல கேட்கப் போறேன். அதுபோல இந்த நிகழ்ச்சியில் இருக்கிறதுல அர்ச்சனா செய்ற செயலை என்னால பாக்கவே முடியல.

நான் முதல்ல இருந்தே சொல்லிட்டே இருக்கேன் அந்த பொண்ணு நடிச்சிட்டே இருக்குன்னு. நான் இதுவரைக்கும் யாரையும் இவ்வளவு மோசமா பேசினது இல்ல. ஆனா இந்த சீசனில் தான் இவங்க நடந்து கொள்வதை வைத்து என்னால பேச தோணுது. இதுக்கு ஏற்கனவே ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்புன அதாவது பிரதீப்பின் பெயரை சொல்லாமல் அவரை குறிப்பிட்டு சொல்லி நான் யாரை சொல்றேனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் என்று அவரை கூட இந்த நிகழ்ச்சியில் நீங்க வச்சு இருக்கலாம் என்று எனக்கு தோணுது என்று சொல்லி இருக்கிறார்

அதுபோல இதுவரைக்கும் பிரதீப் மீது பயங்கரமான குற்றசாட்டுகளை வைத்துக் கொண்டிருந்த வனிதா இப்போது அதைவிட அர்ச்சனா செய்வது தான் தனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது என்கிற விதத்தில் பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் விவாதம் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+