Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனிதா பற்றிய ரகசியத்தை உடைத்த விசித்திரா.. இதனால் தான் ஜோவிகா கூட பேசல! வீடியோவால் ஏற்பட்ட பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த விசித்திரா முதல் முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் யாரோடு எல்லாம் பேசினேன்.. யாரோடு பேசவில்லை என்பது பற்றி அதில் பேசியிருக்கிறார்.

அதுபோல வனிதா பற்றியும் ஜோவிகாவோடு தான் எதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேசவில்லை என்பது பற்றியும் விசித்திரா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

bigg boss 7 Vichitra has shared about Vanitha and why she didnt talk to Jovika

அந்த வகையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அதிகமான சர்ச்சைகளை சந்தித்து வந்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்தே கடைசி நாள் வரைக்கும் சண்டை சச்சரவுகளுக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரும் செய்யாத சாதனையை நடிகை விசித்ரா செய்திருந்தார்.

காரணம் வயது அதிகமாக இருந்த விசித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்த பெருமையை பெற்றிருந்தார். இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வயதில் அதிகமான போட்டியாளர்கள் தான் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்படுவார்கள். ஆனால் விசித்திரா உள்ளே இளைஞர்களோடு போட்டி போட்டு 90 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தார். அதோடு அதிகமான ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக பேட்டி ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு விசித்திரா பதில் அளித்து இருக்கிறார். அதில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நீங்கள் யாரிடமெல்லாம் பேசினீங்க என்று கேட்டு இருக்கிறார்கள். நான் அதிகமான நபர்களிடம் பேசி இருந்தேன். எனக்கு போன் செய்தவர்களுக்கு நானும் பதில் கொடுத்தேன். அதுபோல பலர் என்னை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து எனக்கு மெசேஜ் செய்திருந்தாங்க.

அவங்களையும் நானே கூப்பிட்டு இருந்தேன் என்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது நீங்க ஜோவிகாவோடு பேசினீங்களா? ஏன்னா நீங்க நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே உங்களுக்கும் ஜோவிகாவுக்கும் படிப்பு விஷயத்தில் பெரிய பிரச்சனை தொடங்குச்சு அதற்கு பிறகு இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நீங்கள் பேசினீங்களா என்று கேட்டிருந்தார்கள். அதற்கு விசித்திரா இல்லை நான் பேசவே இல்லை. எனக்கு பேச வேண்டும் என்று எந்த அவசியமும் ஏற்படல அதனால நான் பேசல என்று சொல்லி இருந்தார்.

அதுபோல வனிதா உங்களை ரிவ்யூ செய்யும்போது அதிகமாக திட்டி இருந்தாரே அது பற்றி நீங்க என்ன சொல்ல போறீங்க என்று கேட்டதற்கு வனிதா முழுக்க முழுக்க இந்த சீசனில் ரிவ்யூவராக செயல்படவில்லை. அவர் ஒரு அம்மாவாக மட்டும் தான் செயல்பட்டு இருந்தார். தன்னுடைய மகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று வனிதா நினைத்திருந்தார். ஆனால் அது நடக்காமல் போனபோது அவருக்கு ஏற்பட்ட கோபத்தால் தான் எல்லாரையும் திட்டிக் கொண்டிருந்தாரே தவிர அவர் ரிவியூவராக பேசவில்லை.

bigg boss 7 Vichitra has shared about Vanitha and why she didnt talk to Jovika

எல்லா இடத்திலும் அம்மாவாக தான் பேசிக் கொண்டிருந்தார் என்று விசித்திரா கூறி இருக்கிறார். அதுபோல எனக்கும் தினேஷுக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகமான பிரச்சனை ஏற்பட்டது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல இடங்களில் சரியாக முடிவு எடுத்திருக்கிறேன், பேசி இருக்கிறேன். அது ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். படிப்பு விசயமாக இருந்தாலும் சரி, அதற்கு பிறகு அர்ச்சனாவை அங்கிருந்த பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றியதாக இருந்தாலும் சரி, நான் என்னுடைய ஸ்டாண்டில் சரியாக இருந்தேன்.

ஆனால் தினேஷ் மட்டும் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவரிடம் நான் காபி வேண்டுமா என்று கேட்டால் கூட அவர் என்ன... நீங்க கேம் விளையாடுறீங்களா? எதுவும் ட்ரை பண்றீங்களா? என்று வேறு கோணத்தில் தான் கேள்வி கேட்பார் என்று அந்த வீடியோவில் விசித்திரா பேசியிருக்கிறார். இது இணையத்தில் இப்போது பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+