எல்லோரும் சொன்னது பொய்.. நான் குளிக்கும் போது கூட.. பிரதீப் பற்றி ரகசியத்தை உடைத்த விசித்திரா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து முதல் முறையாக விசித்திரா விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் பிரதீப் பற்றி பலரும் உள்ளே சொன்ன குற்றச்சாட்டுகள் பொய் என்று அதில் விசித்திரா கூறி இருக்கிறார்.
ஏற்கனவே பிரதீப் கதவை பூட்டாமல் பாத்ரூம் போகிறார் என்று சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பாத்ரூமுக்கு அங்கு தாழ்ப்பாள் கிடையாது. அதனால் நானும் பல கஷ்டங்களை அனுபவித்தேன் என்று விசித்ரா பேசியிருக்கிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆகிவிட்ட நிலையிலும் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு மட்டும் இணையத்தில் இன்னும் குறைந்தபாடு இல்லை. அதிலும் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருத்தராக இப்போதுதான் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று விசித்திரா முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது பிரதீப் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஏற்கனவே பிரதீப் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் தான் அவர் மீது உள்ளே இருந்த போட்டியாளர்கள் ஒரு சிலரால் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
பிறகு அவரால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை சொல்லி வெளியேற்றப்பட்டார். ஆனால் பிரதீப்புடைய வெளியேற்றம் தவறு என்று விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவருக்கு எதிராக ரெட் கார்ட் கொடுத்தவர்கள் மீது கடும் கேள்வி கேட்டிருந்தார். இப்படியான நிலையில் பிக் பாஸ்க்கு பிறகு பிரதீப்பிடம் நீங்கள் பேசினீர்களா என்று விசித்திராவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஆமாம் நான் பேசினேன் என்று விசித்திரா கூறியிருக்கிறார். அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அது குறித்து நீங்கள் என்ன சொல்ல வரீங்க என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பிக் பாஸ்க்குள் பிரதீப் கதவை திறந்து வைத்துக்கொண்டு டாய்லெட் போகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் ஸ்மால் பாஸ் ஹவுஸ்க்குள் பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் கிடையாது என்று விசித்திரா கூறி இருக்கிறார்.
அதில் நான் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தபோது பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் இல்லை என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். அதற்கு லாக் போடும்படி நான் பிக் பாஸ் இடமே பலமுறை கேமரா முன்பும் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர்கள் செய்யவே இல்லை. நான் பாத்ரூம் போகும்போது வெளியில் வந்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு தான் குளிக்கவே போவேன்.
ஆனால் அப்பவே பிரதீப் சொல்லுவான். இது ஏதோ பிளான் பண்ணி லாக்கை எடுத்து இருக்காங்க. அதனால ஏதாவது பிரச்சனை வரும் என்று சொல்வான்.. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் நானும் பிரதீப்பும் தான் இரவு சரியான நேரத்திற்கு தூங்குவோம். சரியான நேரத்தில் எழுந்திருப்போம். ஆனால் அவன் நைட்டெல்லாம் தூங்காம இருக்கான் எங்களையே முறைச்சு பார்த்துகிட்டு இருக்கிறான் என்று சொன்னதெல்லாம் உண்மையே கிடையாது பொய் தான்.
பிரதீப்பை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் அவன் மீது இல்லாத பழியை எல்லாம் சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டார்கள் என்று விசித்திரா சொல்லி இருக்கிறார். அதற்காக நான் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே தவறு என்று சொல்லி அவர்களிடம் வாதிட்டேன் என்றும் அந்த பேட்டியில் விசித்திரா பேசியிருக்கிறார்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications