பூர்ணிமா “அந்த” வார்த்தை சொல்லி ஏமாத்திட்டாங்க.. கேஸ் போட்டு இருக்கேன்.. விஷ்ணு சொன்ன பகீர் ரகசியம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அதில் போட்டியாளராக கலந்து கொண்ட விஷ்ணு அந்த நிகழ்ச்சி பற்றி பல ரகசியங்களை நேரலையில் பேசி இருக்கிறார். அந்த வகையில் பூர்ணிமா தன்னிடம் ஒரு விஷயத்தை சொல்லி ஏமாற்றியதால் தான் தான் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தேன் என்று விஷ்ணு குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
அதோடு பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு தான் எனக்கு தெரியவந்தது பூர்ணிமா மற்றும் மாயா என்னை யூஸ் பண்ணிக்கொண்டு வெளியே நான் அவரை யூஸ் பண்ணி விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்று மேலும் சில விஷயங்களையும் அந்த பேட்டியில் விஷ்ணு பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இது பற்றிய பேச்சு மட்டும் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வெளியே வந்ததும் சிலர் இன்டர்வியூ கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் விஷ்ணுவும் சில இன்டர்வியூ கொடுத்திருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் பிக்பாஸுக்குள் இருக்கும்போது தான் எதற்காக பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தேன் என்பது பற்றி விளக்கி இருக்கிறார். அப்போது பூர்ணிமா என்னிடம் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதாவது பிரதீப் தன்னை பற்றி இரட்டை அர்த்தமுள்ள வகையில் தன்னை பேசியதாக சொல்லியிருந்தார். நான் அதை உண்மை என்று நம்பி இருந்தேன். பிறகு பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த நேரத்தில் எல்லாருக்குமே தெரியும் அந்த நேரத்தில் எல்லா பெண்களும் பிரதீப் மீது குற்றச்சாட்டுகள் வைத்திருந்தனர்.
ஏற்கனவே என்னிடம் பூர்ணிமா சில விஷயங்களை சொல்லி இருந்ததால் நான் அப்போ இது உண்மைதான் என்று நினைத்து விட்டேன். இத்தனை கேமரா இருக்கும் போது எல்லா பெண்களும் எப்படி பொய் சொல்லுவாங்கன்னு நினைச்சு தான் நானும் ரெட் கார்ட் கொடுக்க சம்மதித்தேன். நான் எந்த இடத்திலும் பிளான் பண்ணி அப்படி பண்ணவே இல்லை. அது எனக்கு கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியவந்தது.
அதனால் தான் நான் ஒரு பிக்பாஸுக்குள் இருக்கும்போது கோர்ட் டாஸ்க்கில் பூர்ணிமா மீது கேஸ் கொடுத்தேன். அப்ப கூட நீங்க என்னிடம் பிரதீப் உங்களை அசிங்கமாக வர்ணிச்சான் என்று சொன்னிங்களே என்று கேள்வி கேட்டேன். அதற்கு அவர் சமாளித்து இருந்தார். இப்போ நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரதீப்பிடம் பேசினேன்.
நான் வெளியே வந்த பிறகு அந்த எபிசோடு பார்க்கும்போது தான் எனக்கு பிரதீப் பூர்ணிமாவிடம் பேசியது பூர்ணிமாவை பற்றி அல்ல என்னை பற்றி அதை பூர்ணிமா தவறாக நினைத்துதான் என்னிடம் பிரதீப்பு பற்றி பேசியிருக்காங்க என்பது நான் புரிஞ்சுகிட்டு பிரதீப்பிடம் சாரி சொன்னேன்.
அவனும் அதை புரிஞ்சுகிட்டான். ஆனால் பூர்ணிமா உள்ளே பல இடங்களில் நான் அவங்களை யூஸ் பண்ணிக்கிட்டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அது எனக்கு வெளியிலே எவ்வளவு பிரச்சனையை கொடுக்கும்னு அவங்க யோசிக்கல. ஒரு ஆம்பளை பொண்ணை யூஸ் பண்ணிக்கிட்டான்னா வெளியில மக்கள் என்ன அர்த்தத்துல எடுத்துப்பாங்கன்னு கொஞ்சமாவது பூர்ணிமா யோசிச்சு பார்த்தாங்களா? எல்லா இடத்திலும் என்ன அவங்க அந்த மாதிரி தான் குற்றச்சாட்டு வச்சாங்க என்று கோபத்தையும் வருத்தத்தையும் அந்த பேட்டியில் விஷ்ணு கொட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications