டிக்கெட் 2 பினாலே டாஸ்க் 4... ரசிகர்களின் மனதில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டார்களே
சென்னை: ஒரு டிக்கெட்டை ஜெயிப்பதற்காக நாலாவது டாஸ்க்கில் வெறிகொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போட்டியாளர்கள்.
Recommended Video
இந்த டாஸ்க்கில் அனைத்துமே வாயால் வடை சுடுவது ஆகவே இருக்கிறதே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

வாய்க்கு தான் அதிகம் வேலை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் விளையாட்டுகளும் போட்டிகளும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது நடந்து வரும் டாஸ்க்குகள் அனைத்துமே விறுவிறுப்பு இல்லாமல் இருக்கிறது என்று போட்டியாளர்கள் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நிகழ்ச்சியின் சுவாரசியம் மிகுந்ததாக இந்த சீசனில் டாஸ்க்குகள் இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்து வருகிறது.

கருத்துகள் எல்லாம் வேற லெவல்
போட்டியாளர்களின் கருத்தும் இந்த வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் கருத்தும் ஒருமித்த கருத்தாக இருக்கவேண்டும். அவர்களில் யார் சக போட்டியாளர்களின் கருத்தை பிரதிபலிக்கின்ற மாதிரி கருத்து சொல்கிறார்களோ அவர்கள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் போட்டியாளர்களின் மனதில் இருப்பதை சொல்கிறார்களோ இல்லையோ பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களின் கருத்தை தற்போது சொல்லி வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

முட்டை உடைக்கும் டாஸ்க்
முட்டை உடைக்கும் டாஸ்க்கில் நடைபெற்ற சில செயல்பாடுகள் ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. அதையேதான் தற்போது போட்டியாளர்களும் கூறியிருக்கிறார்கள். இந்த டாஸ்க்கில் ஜெயிக்கப்போவது யாரு என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதிகமான சரியான பதில்களைக் கூறி சிபி மற்றும் சஞ்சீவ் முன்னணியில் இருக்கும் போது அமீர் ஒருகட்டத்தில் பின்னணியில் இருக்கிறார். இதனால் இவர்கள் மூவரில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

ஜெயிக்கப்போவது யாரு
சிபி விளையாட்டில் உண்மையாக இருக்கிறேன் என்று விளையாட்டை விளையாடாமல் ஜெயித்துக் கொண்டிருக்கிறான் என்று நிரூப் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முட்டை அடிக்கும் டாஸ்க்கில் வேணுமென்றே டார்கெட் செய்தார்கள் என்று அமீர் கூறியிருக்கிறார். அவருடைய கருத்தை ஏற்கனவே பாவனி கூறி இருந்ததால் அவர் ஒரு கட்டம் முன்னோக்கி வருகிறார் பிக் பாஸ் என்கிற டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் போலியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சஞ்சீவ் கூறியதும் எங்களின் கருத்தும் அதுதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications