பிரியங்கா CWC 5 டைட்டில் ஜெயித்ததை கொண்டாட கூட முடியல.. இப்போ அவங்க சொன்னது இதுதான்! அமீர் விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக சிலர் விஜய் டிவி பிரபலங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னராக பிரியங்கா தான் வெற்றி பெற்றார் என்று புது தகவலை பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான அமீர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரத்திலிருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை என்னை இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த ஒரு தொகுப்பாளர் வேலை செய்யவிடாமல் தடுக்கிறார். அதனால் நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்குப் பிறகு அந்த தொகுப்பாளர் பிரியங்கா தான் என்று இணையத்தில் பலரும் அவரை திட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றில் இருந்து விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருக்கின்றனர். பாவனி, ஷகிலா, சுனிதா, குரோஷி, நாஞ்சில் விஜயன், டிஜே பிளாக் போன்ற பலர் தங்களுடைய ஆதரவு பிரியங்காவிற்கு என்று தெரிவித்துவரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகம் ஆகி பிரியங்காவின் நண்பரான அமீர் இது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக பிரியங்கா ஜெயித்துவிட்டார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. அது உண்மைதான். பிரியங்கா ஜெயித்துவிட்டார். ஆனால் அந்த வெற்றியை கூட பிரியங்காவால் கொண்டாட முடியவில்லை. வெற்றி பெற்ற அடுத்த நாள் தான் இந்த பிரச்சனை வந்தது. அப்போது மணிமேகலை வெளியிட்ட வீடியோ குறித்து நான் ஏதாவது பதில் கொடுத்தால் கூட அதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தான் பிரியங்கா எதுவும் செய்யவில்லை.
ஆனால் எங்களிடம் யாரிடமும் பிரியங்கா எந்த போஸ்டும் போட சொல்லி கேட்டது கிடையாது. இப்போ தொடர்ச்சியாக விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு சப்போர்ட் கொடுக்கிறார்கள் என்பதால் மக்கள் பலரும் பிரியங்கா சொல்லி தான் இவர்கள் எல்லோரும் இப்படி செய்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவெல்லாம் உண்மை கிடையாது.
மணிமேகலை அவங்களுடைய வீடியோவில் டாமினேஷன் என்று சொல்லி இருந்தார். டாமினேஷன் என்றால் நான்தான் மேலே மத்தவங்க எல்லாம் கீழே என்று சொல்றது தானே? ஆனா இதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. பிரியங்கா எந்த இடத்திலும் அதுபோல செஞ்சதே கிடையாது. பிரியங்கா டாமினேஷனாக இருக்கிறாள் என்றால் யாராவது அவரை கிண்டல் செய்கிறார் என்றால் நான் தொகுப்பாளராக இருக்கிறேன் அல்லது ஜட்ஜ் ஆக இருந்திருக்கிறேன் நீங்கள் எப்படி என்னை கிண்டல் செய்யலாம் என்று சொல்லலாமே? அப்படி பிரியங்கா எந்த இடத்திலும் யாரிடமும் சொன்னது கிடையாது.
அவள் எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னை தாழ்த்தி தான் பிறரை சிரிக்க வைப்பார். ஒரு பொண்ணை சப்போர்ட் பண்றேன்னு இன்னொரு பொண்ணை அசிங்கப்படுத்துறீங்க. என்னுடைய சப்போர்ட் பிரியங்காவிற்கு தான் ஏன்னா அவங்க கூட நாங்க இருந்துட்டு இருக்கிறோம். அவங்களை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும் என்று அந்த பேட்டியில் அமீர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications