மீண்டும் அப்பாவான மகிழ்ச்சியில் பிக் பாஸ் ஆரி.. “ஒன்பது மாதம்”.. உருக்கமாக வெளியிட்ட பதிவு
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஆரி தன்னுடைய twitter பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருக்கிறது என்று ஆரி கூறிய தகவலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தையை குறித்து உருக்கமாக ஆரி கொடுத்த கேப்ஷன் குறித்து ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சிலர் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் போய் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கின்றனர். திரைப்படங்களில் நடித்து வாங்காத பெயரை கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிலர் தட்டி இருக்கின்றனர்.
அந்த வகையில் ஒருவர்தான் பிக் பாஸ் ஆரி. பிக் பாஸ் ஆரி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அது அந்த அளவிற்கு இவருக்கு பெரிய பெயரை வாங்கி கொடுக்கவில்லை. ஆனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் அதிகமான ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் நான்காவது சீசன் தான் அதிக அளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது.
இயற்கை விதைகளை பாதுகாத்து விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் ஆரி பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து அதிகமான திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது. ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை தான் கொடுத்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி இருக்கும்போது அவருடைய மகள் ஃபேமிலி ரவுண்டில் வந்து பலருடைய மனதையும் கவர்ந்திருந்தார். அதுபோல தன்னுடைய பெண் குழந்தையை குறித்தும் ஆரி பெருமையாக பேசியிருந்தார். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று ஆரி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் ஒன்பது மாத காத்திருப்பதற்கு பிறகு இன்று என்னுடைய குட்டி இளவரசனை நான் பார்த்திருக்கிறேன் நான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் என்று அதில் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications