சர்ச்சையில் சிக்கி இருக்கும் மனைவி குறித்து பிக் பாஸ் அபிநய் வெளியிட்ட பதிவு..இது தான் காரணமாம்..!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அபிநய் தன்னுடைய மனைவியின் பிறந்தநாள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அபிநய் மனைவி சமீபத்தில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என்று அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மனைவிக்காக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பதிவு குறித்து அதிகமான கருத்துக்கள் குவிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்தவர்தான் அபிநய். இவர் பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் தெரிந்தது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக அபிநய் இருக்கும் போது ஆரம்பத்தில் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகி வந்த இவர் பாவனியிடம் மட்டும் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வதாக பாவனி வெளிப்படையாக பேசியிருந்தால் இது குறித்து சர்ச்சையில் சிக்கியவர் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
அந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிநய் எலிமினேட் ஆகி வெளியே வந்த நேரத்தில் அவருடைய மனைவி அபர்ணாதாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநய் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கூறி பல்வேறு கருத்துக்களும் அந்த நேரத்தில் பரவி வந்தது. அதற்கு பிறகு பிக் பாஸ் பார்ட்டியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தனர்.

பிறந்தநாள் குறித்து பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், நீங்கள் என் வாழ்க்கையில் அர்த்தத்தை கொண்டு வந்து எல்லா நல்ல வழியிலும் என்னை பாதித்துவிட்டீர்கள். உங்களுடன் என் வாழ்க்கையை வாழ்வதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மேலும் வாழ்க்கையில் இதைவிட சிறப்பாக எதையும் கேட்டிருக்க முடியாது. என் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் உண்மையான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை எப்போதும் நேசிக்கிறேன். உங்களுக்கு சிறந்த விஷயங்கள் மட்டுமே நடக்கட்டும் என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.
இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் சில மாதங்களுக்கு முன்பு அபர்ணா குறித்து ஒரு பெண் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அவருடைய மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக அபர்ணா ஏமாற்றிவிட்டதாக அதில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்து தற்போது எந்த தகவல்களும் வெளியாகாத நிலையில் தன்னுடைய மனைவிக்கும் பிறந்தநாளுக்கு அபிநய் வாழ்த்து தெரிவித்திருப்பது தான் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications