விக்ரமனை பற்றி விமர்சித்த தனலட்சுமிக்கு ஏடிகே கொடுத்த நச் பதிலடி.. எதிர்பார்க்காத அறிவுரை!
தவறாக தொடுவதற்கும் ஆரோக்கியமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று ஏடிகே பதிவு வெளியிட்டிருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் மீது தனலட்சுமி பொது வெளியில் பல்வேறு குற்றசாட்டுகளை வைத்திருக்கிறார்.
அசீம் பொம்மை டாஸ்கில் தன்னிடம் நடந்து கொண்டது தவறு என்று கூறும் விக்கிரமன் எதற்காக ஏடிகே தன்னிடம் விளையாடும் போது தன்னுடைய ஆடையை கிழித்ததற்கு கேள்வி கேட்கவில்லை என்று தனலட்சுமி கேள்வி கேட்டிருந்தார்.
தனலட்சுமியின் கேள்விக்கு முதல் முறையாக ஏடிகே சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

முடிவடையாத புகைச்சல்
விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து பல வாரங்கள் ஆன நிலையிலும் தற்போது அந்த நிகழ்ச்சியை பற்றி போட்டியாளர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி இன்னும் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த சீசனில் டைட்டில் வின்னராக விக்ரமன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் பெரும் கவலையாக இருக்கும் நிலையில், அதை குறித்து விக்கிரமனும் பல்வேறு பேட்டிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்.

தனலட்சுமியின் கருத்து
அதுபோல டைட்டில் ஜெயித்த அசீம் ஒரு பக்கம் தன்னுடைய கருத்தை பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அசீமிற்க்கு ஆதரவாக தனலட்சுமி சமூக வலைத்தளத்தில் தற்போது வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் மற்றும் தனலட்சுமி இடையே அதிகமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விக்ரமன் தான் தனலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து அசீமுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த தனலட்சுமி உள்ளே எல்லோரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அசீம் தான் உண்மையாக இருக்கிறார். அசீமை பார்க்கும்போது என்னை பார்க்கிற மாதிரி இருக்கிறது. அசீம் தான் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து வந்தார்.

தனலட்சுமியின் குற்றச்சாட்டு
இந்த நிலையில் அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் அசீமை அஃப்யூசர் அசீம் என்று சொல்வது தவறு, அசீம் என்னிடம் பொம்மை டாக்கில் விளையாடும் போது தவறான எண்ணத்தில் என்னை தொடவில்லை. அது விளையாட்டு மட்டும் இல்லாமல் அசீமை அப்யூசர் என்று சொல்லும் விக்ரமனும் என்னிடம் விளையாடும் போது என்னுடைய காலை பிடித்து இழுத்து வைத்திருந்தார் என்று கூறி, அதுமட்டுமல்லாமல் அசீமிடம் மட்டும் எனக்காக வாதாடின விக்ரமன், ஏடிகே என்னிடம் விளையாடும் போது என்னுடைய சட்டையை பிடித்து இழுத்தார். அப்போது என் பக்கம் இருக்காமல் தப்பு செய்தவர் பக்கம் தானே விக்ரமன் இருந்தார். இதிலிருந்து அவருடைய கேரக்டர் தெரிகிறது என்று பல குற்றச்சாட்டுகளையும் தனலட்சுமி கூறியிருந்தார்.

ஏடிகேவின் பதில்
இந்த நிலையில் ஏடிகே தனலட்சுமியின் பேச்சுக்கு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "ஒருவரை தவறாக தொடுவதற்கும் ஆரோக்கியமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது" என்று பதிவிட்டு இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் "இந்த பிக் பாஸ் ஃபேம் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான். எனவே நேர்காணலில் மற்றவர்களை இழிவு படுத்தாதீர்கள். மாறாக உங்கள் தொழிலை நோக்கி உழையுங்கள். உங்கள் சக போட்டியாளர்கள் மீது எச்சிலை துப்பாமல் உங்கள் அடுத்த வேலையை விளம்பரப்படுத்த மீடியாவை பயன்படுத்துங்கள். நிகழ்ச்சி முடிந்து எதார்த்த நிலைக்கு செல்லுங்கள். "என்று அறிவுரையும் கூறி பதிவு வெளியிட்டு இருக்கிறார். தற்போது இது குறித்து சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications