பிரதீப் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல! நான் பேசியது இதுதான்.. ஆனால்! பிக் பாஸ் ஐசுவின் அப்பா எமோஷனல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ஐசுவின் அப்பா முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய மகள் கலந்து கொண்டதால் தான் பட்ட வேதனை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதோடு பிரதீப்பிடம் தான் பேசிய சேட்டிங்கை பிரதீப் லீக் செய்ததால் தனக்கு வந்த கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அந்த பேட்டியில் ஐசுவின் அப்பா பேசியிருக்கிறார்.
ஒருவரை நம்பி தான் பேசியது வெளியாகி பல பேர் தன்னை அவமானப்படுத்திய விதம் குறித்து எமோஷனலாக ஐசுவின் அப்பா பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதத்தில் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றிய சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதிலும் இந்த சீசனில் பிரதீப்புடைய வெளியேற்றம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல பிரதீப் வெளியேற்றத்திற்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்த ஐசுவின் வெளியேற்றவும் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதுவும் ஐசு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ஐசுவின் தந்தை பிரதீப்பிற்கு தனியாக செய்த சாட்டிங்கை பிரதீப் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அது பெரிய அளவில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முதல் முறையாக ஐசுவின் தந்தை பேசியிருக்கிறார். அதில் என்னுடைய மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நான் பெரிய அளவில் மன வருத்தத்தில் இருந்தேன்.
அவளை பற்றி அதிகமாக நெகட்டிவ் கமாண்டுகள் வந்து கொண்டிருந்தது. எந்த அப்பாவும் தன்னுடைய பொண்ணை பற்றி பலர் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. அந்த வருத்தமான மன நிலைமையில் தான் நான் இருந்தேன். அப்போது எனக்கு பிரதீப் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறார் என்ற தகவல் கிடைத்தது. அதுபோல அவருடைய பர்சனல் நம்பரும் கிடைத்தது.
ஏற்கனவே எனக்கு பிரதீப்பை நன்றாக பிடிக்கும். அதனால் நான் பிரதீப்புக்கு பர்சனலாக சில வேண்டுகோள் வைத்தேன். அதாவது நீங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக போகப் போறீங்க என்று செய்தி நான் கேள்விப்பட்டேன். அப்படி உள்ளே போகும்போது என்னுடைய மகளை நீங்கள் ஒரு அண்ணனாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். நான் அந்த இடத்தில் இல்லை என்பதால் நீங்கள் என்னுடைய பொண்ணுக்கு சரியான அட்வைஸ் பண்ணுங்க என்று வேண்டுகோள் வைத்திருந்தேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications