ஹோம் டூர் வீடியோவால் வெளியான பிக் பாஸ் அக்ஷராவின் ரகசியங்கள்... அப்போ அது உண்மைதானா..?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த அக்ஷரா தன்னுடைய ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிரமாண்டமாக இருக்கும் தன்னுடைய வீட்டில் ஒவ்வொரு அறையை பற்றியும் சுற்றி காண்பித்த அக்ஷரா பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தன்னைப் பற்றியும் பல தகவல்களை அந்த வீடியோவில் அக்ஷரா பேசி இருக்கிறார். அதை பார்க்கலாம்,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விடலாம் என்பது பலருடைய நினைப்பாக இருக்கிறது. பல பேருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் விடுகிறது.
அந்த வகையில் ஒருவர்தான் நடிகை அக்ஷரா ரெட்டி. இவர் ஒரு உலக அழகி பட்டத்தை பெற்றவராக இருந்தாலும், பல பேருக்கு தெரியாத முகமாகத்தான் இருந்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். இவருடைய ஆட்டிட்யூட் பலரும் பார்த்து அதிர்ச்சியாகி இருந்தாலும் இவருடைய அழகை பார்த்து இளைஞர்கள் பட்டாளம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி ஆதரவு கொடுத்து வந்தனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அக்ஷரா இந்த நிகழ்ச்சியில் 80 நாட்கள் வரை உள்ளே இருந்தார். பிறகு வாக்குகளின் அடிப்படையில் திடீரென்று அக்ஷராவும் வருனும் ஒன்றாகவே வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற கிசுகிசுப்பு சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கமும் கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் அக்ஷரா ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக இல்லை என்றாலும் தற்போது ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரபலம் அடைந்து இருக்கிறார். அதில் தன்னுடைய வீட்டிற்கு அதிகமாக யாரும் வந்தது கிடையாது என்று ஆரம்பத்திலேயே வீடியோவில் கூறியிருக்கிறார். பின்பு தனக்கு பிடித்த ஒவ்வொரு இடங்கள் பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

தன்னுடைய அண்ணன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் பலமுறை எடுத்து கூறியது போல இந்த வீடியோவிலும் அங்கேயும் இங்கேயும் அண்ணன் தங்கை பாசத்தை சிதற விட்டிருக்கிறார். தன்னுடைய அண்ணன் தனக்கு காதலர் தினத்தில் யாருமே கிப்ட் வாங்கி தரவில்லை என்று பீல் பண்ணிய போது வாங்கித் தந்த டெடிபரை கூட அழகாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பதை காட்டி மகிழ்ந்திருக்கிறார்.
அதோடு தன்னுடைய வீட்டில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் ஒவ்வொரு அறையை சுற்றி காட்டிய அக்ஷரா வீட்டில் ஒரு அறையை மட்டும் யாரும் பார்க்கக்கூடாது என்று மறைத்து விட்டார். காரணம் அந்த அறை சுத்தம் இல்லாமல் இருக்கிறது. அதனால் இதை யாரும் பார்க்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். மழையின் அழகை இவருடைய வீட்டில் பார்ப்பதற்கு அமைக்கப்பட்ட மேற்கூரை அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று இவர் விவரித்து கூறியதை பார்த்து பல பேர் வியந்து போயிருக்கிறார்களாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications