பாலாஜியின் புது அவதாரம்...இப்படி ஒரு கேப்ஷனா!!??
சென்னை: லைகர் மூவி வைபில் விஜய் தேவரகொண்டா ரேஞ்ச்க்கு, பாக்ஸர் ஆக மாறி மிரட்டி உள்ள பாலாஜி முருகதாஸின் மிரட்டல் போஸ்கள் சமூக வலைதளங்களில் பாலாஜி முருகதாஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாலாஜி முருகதாஸின் போட்டோக்களை விடவும் அவர் வெளியிட்ட போட்டோக்களுக்கு அவர் கொடுத்த கேப்ஷன் தான் யாரை சொல்கிறார் என்று ஒரு நிமிடம் வலைத்தளவாசிகளை யோசிக்க வைக்கிறது.

பிக் பாஸில் அறிமுகம்
விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் பாலாஜி முருகதாஸ்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கைகள் எல்லாம் சற்று முரட்டுத்தனமாகவே இருந்ததாக அனைவரும் அந்த நேரத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். இருந்தாலும் இவரது முரட்டுத்தனத்திற்கென்று ஒரு ரசிகர் கூட்டம் அப்பொழுது உருவானது .போதாத குறைக்கு அந்த சீசனில் டைட்டில் வின்னரான ஆரியுடன் தொடர்ந்து அந்த சீசன் முழுவதும் இவர் மோதல் போக்கையே பின்பற்றி வந்ததால் அந்த சீசனின் ரன்னராகவும் மிகவும் பிரபலமடைந்தார்.

பிரபலமான மாடல்
சின்னத்திரை அளவில் பெரிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ், மாடலிங் துறையில் பெரிய அளவில் கலக்கி வருகிறார். இதனால் அவ்வப்போது பல வித்தியாசமான போட்டோக்களை இணையத்தில் உலவ விட்டு தனக்கென ஒரு ரசிகர்,ரசிகைகள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். தற்பொழுது லைகர் படத்தில் வரும் விஜய் தேவரகொண்டா போல் பாக்ஸர் ஆக மாறி இவர் கொடுத்துள்ள ஸ்டில்களை பார்த்த ரசிகர்கள், "தலைவா நீங்க மாடலிங் துறைக்கு வந்ததுக்கு பதிலா, பாக்சிங் ஃபீல்டுக்கு போயிருக்கலாம் என்று உசுப்பேத்தி வருகின்றனர்.

ஆரியோடு சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஆரிக்கும் இவருக்கும் இடையே இருந்த உரசல் அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் பலமுறை பல சமயங்களில் வெளிப்பட்டிருக்கிறது. ஆரியை குறி வைத்து சமூக வலைதளங்களில் பாலாஜி முருகதாஸ் ஏதாவது பதிவிடுவதும் அதற்கு ஆரி ரசிகர்கள் பாலாஜி முருகதாஸ் ரசிகர்களும் சில சமயங்களில் கருத்து சண்டைகள் நடந்து வந்திருக்கிறது. தற்பொழுது இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு கொடுத்துள்ள கேப்ஷன் யாரையும் தாக்கி கொடுத்துள்ளாரோ..!? என்று அவரது ரசிகர்களே விவாதம் செய்து வருகின்றனர்.

என்ன அர்த்தமாக இருக்கும்
மற்றவர்கள் உங்களை கேலி செய்தாலும்,புறக்கணித்தாலும், உங்களுடன் சண்டையிட்டாலும் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என்று,மோட்டிவேஷன் காக கூறியுள்ளாரா..!? இல்லை ஏதேனும் பழைய பகையாக இருக்குமோ..!?என்று ஒரு சில சமூக வலைத்தள வாசிகள் யோசித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல் என்ன செய்தாலும் பாலாஜி முருகதாஸுக்கு லைக்குகள் மட்டும் மலை போல உயர்ந்து வருகிறது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications